PMT 1.7

அரங்கனைக் கண்டு அகம்நெகிழ்தல் எந்நாளோ!

653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி
ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்
துறந்து * இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்
தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான *
அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
நிறம்திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்
நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே?
653 maṟam tikaḻum maṉam ŏḻittu vañcam māṟṟi *
ayim(vaṉ) pulaṉkal̤ aṭakki iṭarp pārat tuṉpam
tuṟantu * iru muppŏḻutu etti ĕllai illāt
tŏl nĕṟikkaṇ * nilainiṉṟa tŏṇṭarāṉa **
aṟam tikaḻum maṉattavartam katiyai pŏṉṉi *
aṇi araṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
niṟam tikaḻum māyoṉai kaṇṭu ĕṉ kaṇkal̤ *
nīr malka ĕṉṟukŏlo niṟkum nāl̤e (7)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

653. He changes the evil hearts of people to good, helps them control their five senses and relieves them of the burden of their troubles and sickness, and makes them His devotees so that they can follow the ways of dharma in their minds. When will the day come when my eyes behold the dark-colored Māyon resting on the snake bed in beautiful Srirangam on the Kaveri river and tears swell in my eyes? When will I see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மறம் திகழும் அறமற்றவைகளை; மனம் ஒழித்து மனதிலிருந்து ஒழித்து; வஞ்சம் மாற்றி பொய்யை நீக்கி; வன்(ஐம்)புலன்கள் கொடிய புலன்களை; அடக்கி அடக்கி; இடர்ப் பார சுமையான பழவினைகளாகிற; துன்பம் துறந்து துன்பம் விலக்கி; இரு முப்பொழுது ஆறு காலங்களிலும்; ஏத்தி துதித்து; எல்லை இல்லா எல்லையற்ற; தொல் பழைமையான; நெறி கண் நிலை நின்ற நெறியிலிருந்து; நிலை நின்ற வழுவாத; தொண்டரான அடியார்களான; அறம் திகழும் தர்ம சிந்தனை; மனத்தவர் தம் மனமுள்ளவர்களின்; கதியை விதியை; பொன்னி அணி காவிரியால் அழகு பெற்ற; அரங்கத்து கோயிலிலே; அரவணையில் பாம்பணைமேல்; பள்ளி கொள்ளும் கண்வளரும்; நிறம் திகழும் அழகுடன் கூடிய; மாயோனை மாயனை; கண்டு என் கண்கள் கண்டு என் கண்கள்; நீர் மல்க ஆனந்தக் கண்ணீர் சொரிய; நிற்கும் நாளே! நிற்கும் நாள்; என்று கொலோ என்றோ
maṉam ŏḻittu He eradicate from mind; maṟam tikaḻum the unrighteous things; vañcam māṟṟi remove falsehood; aṭakki help restrain; vaṉ(aim)pulaṉkal̤ the cruel senses; tuṉpam tuṟantu remove the suffereings; iṭarp pāra that is a burden; katiyai and change them to be; tŏṇṭarāṉa the devotees who are; maṉattavar tam filled with; aṟam tikaḻum dharmic thoughts; nilai niṉṟa and doesnt deviate from; nĕṟi kaṇ nilai niṉṟa the righteos path; ĕllai illā that are boundless; tŏl and ancient; etti and offer praises to Him; iru muppŏḻutu in all six times; ĕṉṟu kŏlo when; niṟkum nāl̤e! will be that day when; kaṇṭu ĕṉ kaṇkal̤ I see; māyoṉai the Lord; niṟam tikaḻum who is beautiful; pal̤l̤i kŏl̤l̤um and rests on; aravaṇaiyil the serpent bed (Adisesha); araṅkattu in the temple; pŏṉṉi aṇi adorned by cauvery river; nīr malka and shed tears of bliss