PMT 1.6

என் மனம் உருகும் நாள் எந்நாளோ!

652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை
அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும் *
தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்
திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும் *
களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்
கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும் *
ஒளிமதிசேர்திருமுகமும்கண்டு கொண்டு என்
உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே?
652 al̤i malarmel ayaṉ araṉ intiraṉoṭu * eṉai
amararkal̤tam kuḻuvum arampaiyarum maṟṟum *
tĕl̤i mati cer muṉivarkal̤tam kuḻuvum untit *
ticai ticaiyil malar tūvic cĕṉṟu cerum **
kal̤i malar cer pŏḻil-araṅkattu urakam eṟik *
kaṇval̤arum kaṭalvaṇṇar kamalak kaṇṇum *
ŏl̤i mati cer tirumukamum kaṇṭukŏṇṭu * ĕṉ
ul̤l̤am mika ĕṉṟukŏlo urukum nāl̤e (6)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

652. Brahmā(Nānmuhan)who stays on a beautiful lotus, Shivā, Indira and all other gods, heavenly damsels and wise sages join together and sprinkle flowers in all the directions and worship Him, who rests on the snake-bed in Srirangam that is surrounded by groves blooming with fragrant flowers. When will the day come when I see His divine face bright as the moon and His lotus eyes and worship Him melting in my heart? When will I see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அளி வண்டுகள் மொய்க்கும்; மலர் மேல் தாமரைப்பூவில் தோன்றிய; அயன் அரன் பிரமனும் சிவனும்; இந்திரனோடு இந்திரனோடு கூடிய; ஏனை அமரர்கள் மற்ற தேவர்கள்; தம் குழுவும் குழாமும்; அரம்பையரும் ரம்பை முதலியவர்களும்; மற்றும் தெளி மற்றும் தெளிந்த; மதி சேர் ஞானத்தையுடைய; முனிவர்கள் மகரிஷிகளின்; தம் குழுவும் சமூகமும்; உந்தி நெருக்கித் தள்ளி; திசை திசையில் எல்லா திசையிலும்; மலர் தூவி புஷ்பங்களைப் தூவி; சென்று சேரும் கொண்டு; களி மலர் சேர் தேன் மிக்கக மலர்; பொழில் சோலைகள் நிறைந்த; அரங்கத்து ஸ்ரீரங்கம் கோவிலில்; உரகம் ஏறிக் பாம்பணை மேல்; கண்வளரும் கண்வளரும்; கடல் வண்ணர் கடல் நிறத்தவருடைய; கமலக் செந்தாமரை போன்ற; கண்ணும் கண்களையும்; ஒளி மதி சேர் ஒளி வீசும் சந்திரன் போன்ற; திருமுகமும் திருமுகத்தையும்; கண்டு கொண்டு தரிசித்து; என் உள்ளம் மிக என்னுடைய மனம் மிகவும்; உருகும் நாளே! உருகும் காலம்; என்று கொலோ என்றைக்கோ
ayaṉ araṉ Brahma and Shiva; malar mel born from a lotus flower; al̤i where bees swarm; intiraṉoṭu along with Indra; tam kuḻuvum with the assembly; eṉai amararkal̤ of other gods; arampaiyarum and Rambha and other celestial maidens; tam kuḻuvum with the company of; muṉivarkal̤ great sages; maṟṟum tĕl̤i with great; mati cer knowledge; unti pushed aside in awe; cĕṉṟu cerum and; malar tūvi shower flowers; ticai ticaiyil in all directions; kaṇval̤arum the Lord is reclining; urakam eṟik upon the serpent couch; araṅkattu in the temple of Srirangam; pŏḻil that is filled with groves; kal̤i malar cer containing honey-rich flowers; tirumukamum His face radiates; ŏl̤i mati cer like a shining moon; kaṇṇum with eyes; kamalak like red lotus; kaṭal vaṇṇar and has an ocean-like hue; kaṇṭu kŏṇṭu beholding His face; ĕṉ ul̤l̤am mika my heart; urukum nāl̤e! melts with devotion; ĕṉṟu kŏlo when will that day come?