PMT 1.5

மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!

651 இணையில்லாவின்னிசையாழ்கெழுமியின்பத்
தும்புருவும்நாரதனுமிறைஞ்சியேத்த *
துணையில்லாத்தொன்மறைநூல்தோத்திரத்தால்
தொன்மலர்க்கணயன்வணங்கியோவாதேத்த *
மணிமாடமாளிகைகள்மல்குசெல்வ
மதிளரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
மணிவண்ணனம்மானைக்கண்டுகொண்டு என்
மலர்சென்னியென்றுகொலோவணங்கும்நாளே?
651 iṇaiyillā iṉṉicai yāḻ kĕḻumi * iṉpat
tumpuruvum nārataṉum iṟaiñci etta *
tuṇaiyillāt tŏl maṟai nūl-tottirattāl *
tŏl malarkkaṇ ayaṉ vaṇaṅki ovātu etta **
maṇi māṭa māl̤ikaikal̤ malku cĕlva *
matil-araṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
maṇivaṇṇaṉ ammāṉaik kaṇṭukŏṇṭu * ĕṉ
malarc cĕṉṉi ĕṉṟukŏlo vaṇaṅkum nāl̤e (5)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

651. Sage Narada and the rishi Tumburu play sweet matchless music on their yāzhs and praise Him, who rests on the snake bed in Srirangam. Nānmuhan, adorned with beautiful flowers, worships Him constantly with the incomparable ancient Vedās. When will the day come when I worship, bowing my head, and see the dear sapphire-colored lord decorated with garlands? When will I see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்ப ஆனந்தமளிக்கும்; தும்புருவும் தும்புரு ரிஷியும்; நாரதனும் நாரதரும்; இணையில்லா ஒப்பற்ற; இன்னிசை இன்னிசை தரும்; யாழ் கெழுமி வீணையை மீட்டி; இறைஞ்சி ஏத்த வணங்கித் துதிக்கவும்; துணையில்லா ஈடற்றதாய்; தொல் மறை நூல் பழமையான வேத நூல்; தோத்திரத்தால் ஸ்தோத்திரத்தாலே; தொல் மலர்க் கண் நித்யமான; மலர்க் கண் நாபிகமலத்திலுதித்த; அயன் வணங்கி நான்முகனை வணங்கி; ஒவாது ஏத்த இடைவிடாமல் துதிக்கவும்; மணி மாட ரத்னமயமான மாட; மாளிகைகள் மாளிகைகளையும்; மிகுந்த மிகுந்த; மல்கு செல்வ செல்வம் உடையதுமான; மதிள் அரங்கத்து மதிள்களையுடைய கோவிலில்; அரவணையில் அனந்தசயனத்தின் மேல்; பள்ளி கொள்ளும் கண் வளரும்; மணி மணி போன்ற; வண்ணன் நிறத்தையுடையவனான; அம்மானை எம்பெருமானை; கண்டு கொண்டு இடைவிடாமல் ஸேவித்து; என் மலர் என் மலர் சூடிய; சென்னி தலையானது; வணங்கும் நாளே வணங்கும் நாள்; என்று கொலோ என்றைக்கோ