PMT 1.2

பள்ளிகொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!

648 வாயோரீரைஞ்ஞூறுதுதங்களார்ந்த
வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ *
வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்
மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ் *
காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
மாயோனை மணத்தூணேபற்றிநின்று என்
வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே?
648 ## vāy or īraiññūṟu tutaṅkal̤ ārnta *
val̤ai uṭampiṉ aḻal nākam umiḻnta cĕntī *
vīyāta malarc cĕṉṉi vitāṉame pol *
meṉmelum mika ĕṅkum parantataṉ kīḻ **
kāyāmpū malarp piṟaṅkal aṉṉa mālai *
kaṭi-araṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
māyoṉai maṇattūṇe paṟṟi niṉṟu * ĕṉ
vāyāra ĕṉṟukŏlo vāḻttum nāl̤e! (2)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

648. The thousand mouths of the white snake chant His name and the thousand heads spit fire that looks like a canopy made of fresh flowers. He rests on it like the garland made of Kāyam flowers. When will the day come, when I hold strongly to the pillars and sing wholeheartedly in praise of our God Mayon, who resides in Srirangam? When will I see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துதங்கள் ஆர்ந்த தோத்திரங்கள் நிறைந்த; வாய் ஓர் ஈரைஞ்ஞூறு ஓராயிரம் வாய்களிலே; வளை நல்ல வெண்மையான; உடம்பின் உடம்பை உடையவனாய்; அழல் நாகம் தீ போன்ற நாகம்; உமிழ்ந்த செந்தீ கக்குகின்ற சிவந்த அக்னியானது; வீயாத மலர் வாடாத புஷ்பங்களால் அமைத்த; சென்னி திருமுடியானது; விதானமே போல் விதானம் போல; மேன்மேலும் மிக மேன்மேலும்; எங்கும் பரந்து எங்கும் பரவி நிற்க; அதன் கீழ் அந்த அக்னியின் கீழ்; காயாம்பூ காயாம்பூவின்; மலர் மலர்களாலே; பிறங்கல் தொடுக்கப்பட்டது; அன்ன போன்ற; மாலை மாலை போல் இருப்பவனாய்; கடி அரங்கத்து மணம் மிக்க அரங்கத்து; அரவணையில் அனந்தாழ்வான் மீது; பள்ளி கொள்ளும் கண்வளரும்; மாயோனை மாயனான ரங்கநாதனை; மணத்தூணே திருமணத் தூண்களை; பற்றி நின்று பிடித்து நின்று; என வாயார என் வாயார; வாழ்த்தும் நாளே! துதிக்கும் நாள்; என்றுகொலோ என்றைக்கு வாய்க்குமோ