PAT 4.8.2

ஸ்ரீவைஷ்ணவர் வாழுமிடம் திருவரங்கம்

403 பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் *
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்தவுறைப்பனூர் *
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் *
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே.
403 piṟappu akatte māṇṭu ŏzhinta * pil̤l̤aikal̤ai nālvaraiyum *
iṟaip pŏzhutil kŏṇarntu kŏṭuttu * ŏruppaṭutta uṟaippaṉ ūr **
maṟaip pĕrun tī val̤arttiruppār * varuviruntai al̤ittiruppār *
ciṟappu uṭaiya maṟaiyavar vāzh * tiruvaraṅkam ĕṉpatuve (2)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

403. Srirangam is the place of the lord, who, in a short while, restored the guru's four children, who died the moment they were born, back to life. This is the place where scholars skilled in the Vedās live, making sacrifices in fire and receiving guests happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறை வேதங்களிற் கூறப்பட்டுள்ள; பெருந் தீ சிறந்த மூன்று அக்னிகளையும்; வளர்த்திருப்பார் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்; வரு விருந்தை தன் இல்லத்திற்கு வரும் அதிதிகளை; அளித்திருப்பார் உபசரிப்பர் என்னும்; சிறப்பு உடைய சிறப்பு உடைய; மறையவர் வேதம் அறிந்தவர்கள்; வாழ் வாழும்; திருவரங்கம் திருவரங்கம்; என்பதுவே என்பது; பிறப்பு அகத்தே பிறந்த உடனேயே; மாண்டு ஒழிந்த இறந்தொழிந்த; பிள்ளைகளை புத்திரர்கள்; நால்வரையும் நால்வரையும்; இறைப் பொழுதில் ஒரு நொடிப் பொழுதில்; கொணர்ந்து மீண்டு கொண்டு வந்து; கொடுத்து பெற்றோர் கையில் கொடுத்து; ஒருப்படுத்த அவர்களை ஸம்மதிக்கவைத்த; உறைப்பன் ஊர் வல்லமை உடையவன் ஊர்
ĕṉpatuve it is; tiruvaraṅkam Sri Rangam; vāḻ where lives those; val̤arttiruppār who do vedic sacrifices in; pĕrun tī the three great Agnis (fires); maṟai mentioned in the Vedas; ciṟappu uṭaiya they are with special qualities; maṟaiyavar and knowledgeable in the Vedas; al̤ittiruppār and treat with hospitality; varu viruntai the guests who arrive at their home; uṟaippaṉ ūr its the residing place of the Lord; iṟaip pŏḻutil who in a moment; kŏṇarntu brought back to life; nālvaraiyum the four; pil̤l̤aikal̤ai sons; māṇṭu ŏḻinta who died; piṟappu akatte immediately after birth; kŏṭuttu gave them to the parents; ŏruppaṭutta and made them agreeable