Chapter 2
The beauty of Thirumālirunjolai - (அலம்பா வெருட்டாக்)
Two mountains make the southern land prosperous! These are the mountains where our Lord joyfully resides: Thiruvenkatam and Thirumaliruncholai Malai. In Thirumaliruncholai Malai, there flows a river called Silambaaru. Celestial maidens come there to bathe. Thirumaliruncholai is blessed with natural beauty and is abundant with elephants. This hymn praises + Read more
தென்னாட்டைச் சிறக்க வைப்பவை இரண்டு மலைகள்! எம்பெருமான் உவந்து எழுந்தருளி இருக்கும் மலைகள் இரண்டு மலைகள்! அவை திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை. திருமாலிருஞ்சோலைமலையில் சிலம்பாறு என்று ஓராறு ஓடுகிறது. அங்கே தேவமாதர்கள் வந்து நீராடுவார்கள். திருமாலிருஞ்சோலை இயற்கை எழிலைக் கொண்டது; யானைகள் + Read more
Verses: 338 to 348
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will reach the ankled lotus feet of dark ocean hued Lord Krishna
- PAT 4.2.1
338 ## அலம்பா வெருட்டாக் * கொன்று திரியும் அரக்கரை *
குலம் பாழ் படுத்துக் * குலவிளக்காய் நின்ற கோன் மலை **
சிலம்பு ஆர்க்க வந்து * தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் *
சிலம்பாறு பாயும் * தென் திருமாலிருஞ் சோலையே (1) - PAT 4.2.2
339 வல்லாளன் தோளும் * வாள் அரக்கன் முடியும் * தங்கை
பொல்லாத மூக்கும் * போக்குவித்தான் பொருந்தும் மலை **
எல்லா இடத்திலும் * எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி *
செல்லா நிற்கும் சீர்த் * தென் திருமாலிருஞ் சோலையே (2) - PAT 4.2.3
340 தக்கார் மிக்கார்களைச் * சஞ்சலம் செய்யும் சலவரைத் *
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் * செல்வன் பொன்மலை **
எக் காலமும் சென்று * சேவித்திருக்கும் அடியரை *
அக் கான் நெறியை மாற்றும் * தண்திருமாலிருஞ் சோலையே (3) - PAT 4.2.4
341 ஆனாயர் கூடி * அமைத்த விழவை * அமரர்தம்
கோனார்க்கு ஒழியக் * கோவர்த்தனத்துச் செய்தான் மலை **
வான் நாட்டினின்று * மாமலர்க் கற்பகத் தொத்து இழி *
தேன் ஆறு பாயும் * தென் திருமாலிருஞ் சோலையே (4) - PAT 4.2.5
342 ஒரு வாரணம் * பணி கொண்டவன் பொய்கையில் * கஞ்சன்தன்
ஒரு வாரணம் * உயிர் உண்டவன் சென்று உறையும் மலை **
கரு வாரணம் * தன் பிடி துறந்து ஓடக் * கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் * தண் மாலிருஞ் சோலையே (5) - PAT 4.2.6
343 ஏவிற்றுச் செய்வான் * ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை *
சாவத் தகர்த்த * சாந்து அணி தோள் சதுரன் மலை **
ஆவத் தனம் என்று * அமரர்களும் நன் முனிவரும் *
சேவித்திருக்கும் * தென் திருமாலிருஞ் சோலையே (6) - PAT 4.2.7
344 மன்னர் மறுக * மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல் *
முன் அங்கு நின்று * மோழை எழுவித்தவன் மலை **
கொல் நவில் கூர்வேல் கோன் * நெடுமாறன் தென்கூடல் கோன் *
தென்னன் கொண்டாடும் * தென் திருமாலிருஞ் சோலையே (7) - PAT 4.2.8
345 குறுகாத மன்னரைக் கூடு கலக்கி * வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் * செல்வன் பொன்மலை **
அறுகால் வரி வண்டுகள் * ஆயிர நாமம் சொல்லி *
சிறுகாலைப் பாடும் * தென் திருமாலிருஞ் சோலையே (8) - PAT 4.2.9
346 சிந்தப் புடைத்துச் * செங்குருதி கொண்டு * பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து * ஆவத் தனம் செய் அப்பன் மலை **
இந்திர கோபங்கள் * எம்பெருமான் கனி வாய் ஒப்பான் *
சிந்தும் புறவில் * தென் திருமாலிருஞ் சோலையே (9) - PAT 4.2.10
347 எட்டுத் திசையும் * எண் இறந்த பெருந் தேவிமார் *
விட்டு விளங்க * வீற்றிருந்த விமலன் மலை **
பட்டிப் பிடிகள் * பகடு உரிஞ்சிச் சென்று * மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் * தென் திருமாலிருஞ் சோலையே (10) - PAT 4.2.11
348 ## மருதப் பொழில் அணி * மாலிருஞ் சோலை மலைதன்னை *
கருதி உறைகின்ற * கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை **
விரதம் கொண்டு ஏத்தும் * வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் *
கருதி உரைப்பவர் * கண்ணன் கழலிணை காண்பரே (11)