PAT 4.10.8

மதுரைப் பிறந்த மாமாயனே! என்னைக் காத்திடு

430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு * இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் *
வானேய்வானவர்தங்களீசா!
மதுரைப்பிறந்தமாமாயனே! * என்
ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
430 nāṉ etum uṉ māyam ŏṉṟu aṟiyeṉ * namaṉtamar paṟṟi nalintiṭṭu * inta
ūṉe puke ĕṉṟu motumpotu * aṅketum nāṉ uṉṉai niṉaikkamāṭṭeṉ **
vāṉ ey vāṉavar taṅkal̤ īcā * maturaip piṟanta mā māyaṉe * ĕṉ
āṉāy nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

430. I do not know any of the magic you do. When the Kingarars, the messengers of Yama, come, make me suffer and take me to Yama’s world, I may not be able to think of you, O god of the gods in the sky, O Māya, born in Madhura, my soul is yours. You should protect me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான் உன் மாயம் நான் உன் மாயைகள்; ஏதும் ஒன்று எதையும்; அறியேன் அறியமாட்டேன்; நமன் தமர் யமகிங்கரர்கள்; பற்றி என்னைப் பிடித்து; நலிந்திட்டு துன்புறுத்தி; இந்த ஊனே இந்த சரீரத்தில்; புகே என்று புகுந்துகொள் என்று; மோதும் போது அடிக்கும் போது; அங்கேதும் அந்த சமயத்தில்; நான் உன்னை எம்பெருமானே நான் உன்னை; நினைக்க மாட்டேன் நினைக்க மாட்டேன; வான் ஏய் விண்ணுலகில் இருக்கும்; வானவர் தங்கள் தேவர்களுக்குத்; ஈசா! தலைவனாய்; மதுரைப் பிறந்த வட மதுரையில் அவதரித்த; மா மிக்க ஆச்சரிய; மாயனே! சக்தியையுடையவனே!; என் ஆனாய்! எனக்கு வசப்பட்டிருப்பவனே!; நீ என்னை நீ என்னைக்; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! பள்ளிகொண்டிருப்பவனே!
aṟiyeṉ I will not be aware of; etum ŏṉṟu any of; nāṉ uṉ māyam Your divine illusions; namaṉ tamar when the messengers of Yama; paṟṟi catch hold and; nalintiṭṭu torture me; motum potu when they beat; puke ĕṉṟu and order me to enter into; inta ūṉe another body; aṅketum at that time; nāṉ uṉṉai oh Lord, I will not; niṉaikka māṭṭeṉ remember You; īcā! as the Leader of; vāṉavar taṅkal̤ gods of the; vāṉ ey higher worlds; maturaip piṟanta born in Madhura; with great; māyaṉe! powers; ĕṉ āṉāy! You have become me; nī ĕṉṉai You have; kākka veṇṭum to protect me; pal̤l̤iyāṉe! Oh Lord who rests; aravaṇai on Adisesha; araṅkattu at Sri Rangam