PAT 4.10.2

யான் சாகும்பொழுது என்னைக் குறிக்கொள்

424 சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே! *
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள் *
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை *
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
424 cām iṭattu ĕṉṉaik kuṟikkŏl̤ kaṇṭāy * caṅkŏṭu cakkaram entiṉāṉe *
nā maṭittu ĕṉṉai aṉeka taṇṭam * cĕyvatā niṟpar namaṉtamarkal̤ **
pom iṭattu uṉtiṟattu ĕttaṉaiyum * pukāvaṇṇam niṟpator māyai vallai *
ām iṭatte uṉṉaic cŏlli vaitteṉ * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

424. Look, you need to come and help me when my time comes to an end, O god with a conch and discus in your hands. The Kingarar, the messengers of Yama, will come to take me and bring me terrible pain. I worship you always. Wherever you go, with your miracles you can prevent any suffering that comes to anyone. I am telling you right now while I can. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கொடு சங்கையும்; சக்கரம் சக்கரத்தையும்; ஏந்தினானே! ஏந்தியுள்ள பிரானே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை பாம்பணையில்; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; நமன் தமர்கள் எம தூதர்கள்; நா மடித்து நாக்கை கடித்துக் கொண்டு; என்னை எனக்கு; அனேக தண்டம் பல தண்டனைகளை; செய்வதா கொடுக்க; நிற்பர் வந்து நின்று; போம் என்னை இழுத்துப் போகும்; இடத்து இடத்தில்; உன் திறத்து உம்மைப் பற்றி; எத்தனையும் சிறிதும்; புகாவண்ணம் என் மனதில் தோன்றாதபடி; நிற்பதோர் தன்னை மறைத்துக் கொள்கிற; மாயை வஞ்சனையில்; வல்லை வல்லவராக நிற்கிறீர்; ஆம் ஆதலால் புலன்கள்; இடத்தே நல்ல நிலையிலிருக்கும்போதே; சாம் இடத்து அந்திமகாலத்தில்; என்னை உம்மை நினைக்கமுடியாத என்னை; குறிக்கொள் திருவுள்ளம் பற்றி; கண்டாய் அருள வேண்டும் என்று; உன்னை உம்மைக் குறித்து இப்போதே; சொல்லி வைத்தேன் சொல்லி வைத்தேன்
entiṉāṉe! O One who holds; caṅkŏṭu the conch; cakkaram and the discus; pal̤l̤iyāṉe! and who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; namaṉ tamarkal̤ when the messengers of Yama; nā maṭittu with folded tongues; niṟpar come and wait; cĕyvatā to give; aṉeka taṇṭam several punishments; ĕṉṉai for me; iṭattu and at the place; pom from where they drag me; vallai You are talented; māyai and deceit me; niṟpator by hiding from me; pukāvaṇṇam and make me not to think; ĕttaṉaiyum even a little; uṉ tiṟattu about You; cām iṭattu at the time of death; ĕṉṉai I may not be capable of remembering You; kaṇṭāy I wish to receive; kuṟikkŏl̤ Your grace; ām therefore when my body; iṭatte is in good condition; cŏlli vaitteṉ I tell this; uṉṉai about You now itself