PAT 2.3.12

வஞ்சமகள் சாவப் பாலுண்ட தாமோதரன்

150 வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை *
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன் *
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவையாணாய்நம்பீ! * முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா! இங்கேவாராய்
150
vā enRu solli_ en_ kaiyaip pidiththu *
valiyavE kādhil kadippai *
nOvath thirikkil unakku iNGgu izhukku uRRen *
kādhukaL n^ondhidum killEn *
nāvaR pazham koNdu vaiththEn *
ivai yāNāy n^ambee *
mun vaNYcha makaLaich chāvappāl uNdu sakadiRap pāyndhitta *
dhāmOdharā! iNGgE vārāy. 12.

Ragam

அஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Mother

Simple Translation

150. O dear child, you told me, “If you hold my hand tightly, call me and put the thread in my ears, will it hurt you? Only my ears will hurt. I won’t let you do that. ” O Damodara, I have brought berries for you. You killed the vicious Putanā by drinking milk from her breasts and destroyed Sakatāsuran when he came in the form of a cart. Come here.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வா என்று சொல்லி ’இங்கே வா’ என்று சொல்லி; என் கையைப் பிடித்து என் கையைப் பிடித்து; வலியவே பிடியைத் தளர்த்தாமல்; காதில் கடிப்பை காதில் கடுக்கனை; நோவத் திரிக்கில் வலிக்கவலிக்கப் போட்டால்; உனக்கு இங்கு உனக்கு இங்கு; இழுக்குற்று என் வலி உண்டாகுமா என்ன; காதுகள் நொந்திடும் என் காதுகள் தானே நோகும்; கில்லேன் வர மாட்டேன்; நாவற் பழம் நாவல் பழம்; கொண்டு வைத்தேன் கொண்டு வந்திருக்கிறேன்; இவை யாணாய் நம்பீ! பார் என் நம்பியே!; முன் முன்னொரு நாள்; வஞ்ச மகளை வஞ்கமாக வந்த பூதனை; சாவப் பாலுண்டு மாள பாலை உறிஞ்சினவனே!; சகடு இற சகடமாக வந்த அசுரன்; பாய்ந்திட மடிய பாய்ந்தவனே!; தாமோதரா! தாமோதரா!; இங்கே வாராய் இங்கு வாராய்