NAT 8.5

எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள்

581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! * வேங்கடத்துத்
தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்! *
ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான் *
தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே.
581 vāṉ kŏṇṭu kil̤arntu ĕzhunta * mā mukilkāl̤ ! * veṅkaṭattut
teṉ kŏṇṭa malar citaṟat * tiraṇṭu eṟip pŏzhivīrkāl̤ **
ūṉ kŏṇṭa val̤-ukirāl * iraṇiyaṉai uṭal iṭantāṉ *
tāṉ kŏṇṭa cari-val̤aikal̤ * tarumākil cāṟṟumiṉe (5)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

581. O dark clouds, rising in the sky and spreading everywhere, you pour rain in Thiruvenkatam and make the flowers bloom and drip honey. If you would go to Him, who split open the body of Hiranyan with his sharp claws, bring back my bangles and tell Him how much I love him and suffer.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேங்கடத்து திருவேங்கடமலையிலே; தேன் கொண்ட தேன் நிறைந்துள்ள; மலர் புஷ்பங்கள்; சிதற சிதறும்படி; திரண்டு திரளாக; ஏறி ஆகாயத்திலேறி மழையை; பொழிவீர்காள்! பொழிவீர்கள்; வான் ஆகாயத்தை; கொண்டு விழுங்குவது போன்று; கிளர்ந்து ஒங்கிக் கிளம்பி; எழுந்த எழுகின்ற; மாமுகில்காள்! மேகங்களே!; ஊன் கொண்ட தசையுடன் கூடிய; வள் கூர்மையான; உகிரால் நகங்களாலே; இரணியனை இரண்யனின்; உடல் உடலை; இடந்தான் பிளந்த பிரான்; தான் என்னிடமிருந்து; கொண்ட கொண்டுபோன; சரி வளைகள் கை வளைகளை; தருமாகில் தரக்கூடும் எனில் எனது; சாற்றுமினே அவதியை தெரிவியுங்கள்

Detailed WBW explanation

O clouds that ascend with grandeur, engulfing the heavens and releasing rain in copious congregations, causing the nectar-filled flowers of Thiruvēṅkadamalai to scatter! The Emperumān, with His fierce nails still bearing the remnants of flesh, rent asunder the body of the demon Hiraṇyakaśipu. If that same Emperumān would kindly return the bangles He took from me, kindly inform Him of my plight.