TVT 31

மேகங்களைத் தூதாகக் கூறுதல்

2508 இசைமின்கள் தூதென்று இசைத்தாலிசையிலம் * என் தலைமேல்
அசைமின்களென்றால் அசையிங்கொலாம்? * அம் பொன்மாமணிகள்
திசைமின்மிளிரும்திருவேங்கடத்துவன்தாள் சிமய
மிசை * மின்மிளிரியபோவான்வழிக்கொண்ட மேகங்களே.
2508 icaimiṉkal̤ tūtu ĕṉṟu * icaittāl icaiyilam * ĕṉ talaimel
acaimiṉkal̤ ĕṉṟāl acaiyum kŏlām ** am pŏṉ mā maṇikal̤
ticai miṉ mil̤irum tiruveṅkaṭattu vaṉ tāl̤ * cimaya
micai * miṉ mil̤iriya povāṉ vazhikkŏṇṭa mekaṅkal̤e?31

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2508. She says, “O clouds floating in the sky with shining lightning over hills as beautiful as pure gold studded with jewels, You are going towards the place where he is in the Thiruvenkatam hills that are known everywhere. If I ask you to be my messengers, will you agree? If I ask you to fly over me, will you do that and go to see him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் பொன் அழகிய பொன்னும்; மா மணிகள் சிறந்த ரத்னங்களும்; திசைமின் திக்குகள் தோறும்; மிளிரும் மின்னல்போல ஒளி வீசும்; திருவேங்கடத்து திருவேங்கடமென்னும்; வன் தாள் வலிய அடிவாரத்தையுடைய; சிமயம் மிசை சிகரத்தை நோக்கி; மின் மிளிரிய மின்னல்களை பிரகாசிக்க; வழிக்கொண்ட செய்துகொண்டு; போவான் செல்லும் பொருட்டு முயற்சிக்கும்; மேகங்களே! மேகங்களே!; தூது தூது வார்த்தைகளை; இசைமின்கள் என்று சொல்லுங்கள் என்று; இசைத்தால் சொன்னால்; இசையிலம் சொல்லாமல் போனீர்கள்; என் தலைமேல் நீங்கள் என் தலைமீதாவது; அசைமின்கள் உங்கள் பாதங்களை; என்றால் வைத்துச் செல்லுங்கள் என்றால்; அசையும்கொலாம்? அதுவும் செய்யலாகாதோ?
am beautiful; pon gold; excellent; maṇigal̤ gems; thisai in the directions; min like lightning; mil̤irum shining; thiruvĕngadam known as thiruvĕngadam; van being strong; thāl̤ having foothills; simayam misai with the mountain as motive; min lightning; mil̤iriya making it glow; pŏvān to go; vazhikkoṇda attempting; mĕgangal̤ĕ ŏh clouds!; thūdhu message of errand; isaimingal̤ enṛu please state; isaiththāl if ī say; isaiyilam you went without stating; en thalai mĕl atop my head; asaimingal̤ roam; enṛāl if requested; asaiyum kolām could you not?