TVT 29

தலைவி அன்னங்களை வெறுத்துரைத்தல்

2506 இன்னன்னதூதெம்மை ஆளற்றப்பட்டிரந்தாளிவளென்று *
அன்னன்னசொல்லாப் பெடையொடும் போய்வரும் * நீலமுண்ட
மின்னன்னமேனிப்பெருமானுலகில் பெண்தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொலோ? * குடிச்சீர்மையி லன்னங்களே!
2506 iṉṉaṉṉa tūtu ĕmmai āl̤ aṟṟappaṭṭu irantāl̤ ival̤ ĕṉṟu *
aṉṉaṉṉa cŏllā pĕṭaiyŏṭum poyvarum ** nīlam uṇṭa
miṉ aṉṉa meṉip pĕrumāṉ ulakil pĕṇ tūtu cĕllā *
aṉṉaṉṉa nīrmaikŏlo? * kuṭic cīrmai il aṉṉaṅkal̤e29

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2506. She says, “O swans that were born in good families, go with your mates to the dark-colored lord who shines like lightning and tell him, ‘We are her messengers. She begged us to tell you how she loves you. ’ Women do not go as messengers. Aren’t you the right ones to go for me?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடி உயர்குடிப் பிறப்பால்; சீர்மை இல் வரும் சிறப்பு இல்லாத; அன்னங்களே அன்னப்பறவைகளே!; இவள் இந்தப் பெண்; அற்றப்பட்டு தனக்கு வேறு; ஆள் ஆளில்லாமையால்; இன்னன்ன இப்படிப்பட்ட; தூது தூதாக வேண்டும் என்று; எம்மை இரந்தாள் எங்களை யாசித்தாள்; என்று என்று எண்ணி; அன்னன்ன அவள் கூறிய வார்த்தைகளை; சொல்லா பெருமானிடம் சென்று சொல்லாமல்; பெடையொடும் பெடையோடு; போய்வரும் உலாவித் திரிகின்றன; நீலம் உண்ட நீல நிறத்தையுடைய; மின் அன்ன மின்னல்போன்ற; மேனி திருமேனியையுடைய; பெருமான் உலகில் பெருமானின் உலகில்; பெண் தூது பெண்கள் அநுப்பிய தூது; செல்லா செல்லாது என்று; அன்னன்ன நீர்மை அப்படிப்பட்ட ஸ்வபாவத்தை; கொலோ? உடையவர்களாக இருக்கிறீர்களோ?
kudi arising out of being born in a clan; sīrmai quality; il not having; annangal̤ĕ ŏh swans!; ival̤ this girl; āl̤aṝappattu being without any other person; emmai us; innanna of this type; thūdhu need as messenger; irandhāl̤ beseeched; enṛu thinking this way; annanna words like those; sollā not saying; pedaiyodum with your female swans; pŏy varum you are going; neelam bluish cloud; uṇda one who swallowed; minnanna similar to lightning; mĕni having divine form; perumān sarvĕṣvaran’s; ulagil his world of paramapadham; peṇ thūdhu messenger sent by a girl; sellā will not fructify; annanna like that; nīrmai kolŏ do you have such a nature?