TVT 17

தலைவி கடலை நோக்கித் தேர்வழி தூரல் என்றல்

2494 இருள்விரிந்தாலன்ன * மாநீர்த்திரைகொண்டுவாழியரோ
இருள்பிரிந்தாரன்பர் தேர்வழிதூரல் * அரவணைமேல்
இருள்விரிநீலக்கருநாயிறுசுடர்கால்வதுபோல்
இருள்விரிசோதிப் * பெருமானுறையுமெறிகடலே!
2494 irul̤ virintāl aṉṉa * mā nīrt tiraikŏṇṭu vāzhiyaro! *
irul̤ pirintār aṉpar ter vazhi tūral ** aravu aṇaimel
irul̤ viri nīlak karu nāyiṟu cuṭar kālvatu pol *
irul̤ viri cotip * pĕrumāṉ uṟaiyum ĕṟi kaṭale17

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2494. She says, “O ocean! You look like the darkness that is spreading. May you prosper with your abundant waves. The dark-colored lord resting on the snake bed Adisesha shines like a black sun that spreads its rays and take away the darkness. Do not erase the tracks of the wheels of the chariot on which my beloved rides. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருள் விரி இருள் விரிந்தாற்போல்; நீலக் கரு நாயிறு கறுத்த ஒளியை; சுடர் கால்வது போல் சூரியன் விடுவது போல்; இருள் விரி அந்தகாரம் பரவுவது போல்; சோதி ஒளியையுடைய; அரவு அணைமேல் சேஷ சயனத்தின் மேல்; பெருமான் உறையும் உறையும் பெருமானின்; எறிகடலே! அலைகளையுடைய கடலே!; வாழியரோ! வாழ்க; அன்பர் என் நாயகன்; இருள் பிரிந்தார் இருளில் பிரிந்து போனார்; தேர் வழி அவருடைய தேரின் மார்க்கத்தை; இருள் இருள்; விரிந்தால் அன்ன பரப்பினாற்போன்ற; மா நீர் கறுத்த நீரையுடைய; திரை கொண்டு அலைகளால்; தூரல் அழித்து விடாதே
irul̤ darkness; viri spread out; neelam dark; sudar radiance; kālvadhu setting out; karu black; nāyiṛu pŏl like the sun; irul̤ viri spread out like darkness; sŏdhi one who has radiance; perumān sarvĕṣvaran; aravaṇai mĕl on thiruvananthāzhwān (ādhiṣĕshan); uṛaiyum dwelling for ever; eṛi throwing out (waves); kadalĕ ŏh ocean!; anbar the beloved leading man; irul̤ in the darkness; pirindhār separated (from me); thĕr vazhi marks of (his) chariot; irul̤ darkness; virindhalanna spread out; dark; nīr having water; thirai koṇdu with waves; thūral do not destroy; vāzhiyarŏ may you be happy