TVT 10

தலைவன் குறையுற உரைத்தல்

2487 மாயோன் வடதிருவேங்கடநாட * வல்லிக்கொடிகாள்!
நோயோவுரைக்கிலும் கேட்கின்றிலீர்உரையீர் * நுமது
வாயோ? அதுவன்றிவல்வினையேனும்கிளியுமெள்கும்
ஆயோ? அடும்தொண்டையோ? * அறையோ! இதறிவரிதே.
2487 māyoṉ * vaṭa tiruveṅkaṭa nāṭa * vallikkŏṭikāl̤
noyo uraikkilum * keṭkiṉṟilīr uṟaiyīr ** numatu
vāyo? atu aṉṟi valviṉaiyeṉum kil̤iyum ĕl̤kum
āyo? * aṭum tŏṇṭaiyo? * aṟaiyo itu aṟivu arite10

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2487. He says, “O girls, you are as beautiful as the vines in the Thiruvenkatam hills in the north where Māyon stays. Even though I tell you how I suffer, you don’t listen. Are your mouths as beautiful as thondai fruit? Are you worried that if you speak, the parrots that hear you will feel shy? Tell me, I have done bad karmā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயோன் மாயவனான பெருமானின்; வட திருவேங்கட திருவேங்கடமலையை; நாட இடமாகக்கொண்ட; வல்லி பூங்கொடிபோன்ற; கொடிகாள்! இளம் பெண்களே!; நோயோ என் காதல் நோயை நீங்களாக புரிந்து; உரைக்கிலும் கொள்ளாவிட்டாலும் சொன்னாலும்; கேட்கின்றிலீர் கேட்பதில்லை; நுமது வாயோ உங்கள் வாயோ அது அல்லாமல்; அது அன்றி இன் சொல்லில் ஈடுபடும்படியான; வல் கொடிய; வினையேனும் வினையை உடையதாயுள்ளது; கிளியும் நானும் கிளியும் கேட்டு; எள்கும் துவளும்படி; ஆயோ உங்கள் ஆயோ என்ற சொல்லோ; தொண்டையோ கோவைக்கனிபோன்ற அதரமோ; அடும் இது இப்படி என்னைத் துன்புறுத்துகின்றன; அறிவு அரிதே அறிய அரிதாக இருக்கிறது; அறையோ! உரையீர் என் முறையீட்டைக் கேளுங்கள்
māyŏn belonging to thiruvĕngadamudaiyān (lord of thiruvĕngadam), the one with amaśing activities; vadathiruvĕngadanāda those who are dwellers of thirumalai which is on the northern side; valli like a creeper plant; kodigāl̤ oh women!; nŏy (my) disease; uraikkilum even if mentioned; kĕtkinṛileer you are not listening; ŏ alas!; numadhu your; vāyŏ mouth?; adhu anṛi or else; val vinaiyĕnum me, who has the sins (to say these words); kil̤iyum even the parrot; el̤gum to quiver (after hearing); āyŏ is it the sound “āyŏ”?; thoṇdaiyŏ is it the lips which are like the reddish fruit; adum affected (like this); uraiyīr please tell the reason for this disease; aṛivaridhu unable to ascertain