Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-3-
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்கமாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-
நாங்கள் நோவு படில் இவள் மிகவும் நோவு படும் என்று தரிப்புத் தோற்ற ஒப்பித்து இருக்கிற உங்கள் சந்நிதியும் என்னை நலியா நின்றதுபண்டே துக்கப்படுகிற நான் மெலியும்படி