Chapter 1

Advise that wealth is ephemeral and self realization is lowly whereas serving the Lord is the highest goal - (ஒரு நாயகமாய்)**

செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்
Upon attaining Bhagavān, Āzhvār realizes that there is no dearth in his life and wishes for all in existence on this earth to experience the same. Except for attaining Bhagavān, everything else in life is transitory, emphasizes Āzhvār.

It is said that Sri Ramanujar dedicated this set of divine hymns to the divine feet of ThiruNārāyanaperumāL residing in ThiruNārāyanapuram.
பகவானை அடைந்ததால், தாம் ஒரு குறையும் இல்லாதவராய் இருப்பதாக உணர்ந்த ஆழ்வார். தம்மைப் போலவே பூமியிலுள்ளார் அனைவரும் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தார். எனவே பகவானை அடைவதைத் தவிர மற்றவை நிலையில்லாதவை என்று ஈண்டுக் கூறுகிறார்.

ஸ்ரீ ராமானுஜர் இத்திருவாய்மொழிப் பகுதியைத் திருநாராயணபுரத்திலுள்ள + Read more
Verses: 3123 to 3133
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will survive on this earth without troubles and reach Vaikuntam
  • TVM 4.1.1
    3123 ## ஒரு நாயகமாய் ஓட * உலகு உடன் ஆண்டவர் *
    கரு நாய் கவர்ந்த காலர் * சிதைகிய பானையர் **
    பெரு நாடு காண * இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் *
    திருநாரணன் தாள் * காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)
  • TVM 4.1.2
    3124 உய்ம்மின் திறைகொணர்ந்து * என்று உலகு ஆண்டவர் * இம்மையே
    தம் இன்சுவை மடவாரைப் * பிறர் கொள்ளத் தாம் விட்டு **
    வெம் மின் ஒளி வெயில் * கானகம் போய்க் குமை தின்பர்கள் *
    செம்மின் முடித் திருமாலை * விரைந்து அடி சேர்மினோ (2)
  • TVM 4.1.3
    3125 அடி சேர் முடியினர் ஆகி * அரசர்கள் தாம் தொழ *
    இடி சேர் முரசங்கள் * முற்றத்து இயம்ப இருந்தவர் **
    பொடி சேர் துகளாய்ப் போவர்கள் * ஆதலில் நொக்கென *
    கடி சேர் துழாய் முடிக் * கண்ணன் கழல்கள் நினைமினோ (3)
  • TVM 4.1.4
    3126 நினைப்பான் புகில் கடல் எக்கலின் * நுண்மணலில் பலர் *
    எனைத்தோர் உகங்களும் * இவ் உலகு ஆண்டு கழிந்தவர் **
    மனைப்பால் மருங்கு அற * மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் *
    பனைத் தாள் மத களிறு அட்டவன் * பாதம் பணிமினோ (4)
  • TVM 4.1.5
    3127 பணிமின் திருவருள் என்னும் * அம் சீதப் பைம் பூம் பள்ளி *
    அணி மென் குழலார் * இன்பக் கலவி அமுது உண்டார் **
    துணி முன்பு நாலப் பல் ஏழையர் * தாம் இழிப்பச் செல்வர் *
    மணி மின்னு மேனி * நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)
  • TVM 4.1.6
    3128 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது * மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து *
    ஆழ்ந்தார் என்று அல்லால் * அன்று முதல் இன்று அறுதியா **
    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் * என்பது இல்லை நிற்குறில் *
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி * அண்ணல் அடியவர் ஆமினோ (6)
  • TVM 4.1.7
    3129 ஆம் இன் சுவை அவை * ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின் *
    தூ மென் மொழி மடவார் இரக்கப் * பின்னும் துற்றுவார் **
    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று * இடறுவர் ஆதலின் *
    கோமின் துழாய் முடி * ஆதி அம் சோதி குணங்களே (7)
  • TVM 4.1.8
    3130 குணம் கொள் நிறை புகழ் * மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து *
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும் * ஆங்கு அவனை இல்லார் **
    மணம் கொண்ட போகத்து மன்னியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
    பணம் கொள் அரவு அணையான் * திருநாமம் படிமினோ (8)
  • TVM 4.1.9
    3131 படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து * ஐம்புலன் வென்று *
    செடி மன்னு காயம் செற்றார்களும் * ஆங்கு அவனை இல்லார் **
    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
    கொடி மன்னு புள் உடை * அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)
  • TVM 4.1.10
    3132 குறுக மிக உணர்வத்தொடு * நோக்கி எல்லாம் விட்ட *
    இறுகல் இறப்பு என்னும் * ஞானிக்கும் அப் பயன் இல்லையேல் **
    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் * பின்னும் வீடு இல்லை *
    மறுகல் இல் ஈசனைப் பற்றி * விடாவிடில் வீடு அஃதே (10)
  • TVM 4.1.11
    3133 ## அஃதே உய்யப் புகும் ஆறு என்று * கண்ணன் கழல்கள் மேல் *
    கொய் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் குற்றேவல் **
    செய் கோலத்து ஆயிரம் * சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும் *
    அஃகாமல் கற்பவர் * ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)