தனியன் / Taniyan

திருவாசிரியம் தனியன்கள் / Thiruvāsiriyam taṉiyaṉkal̤

காசினியோர் தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்து *
ஆசிரியப் பாவதனால் அருமறை நூல் விரித்தானை *
தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத் தாரானை *
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே

kāciṉiyor tām vāḻak kaliyukatte vantutittu *
āciriyap pāvataṉāl arumaṟai nūl virittāṉai *
tecikaṉaip parāṅkucaṉait tikaḻ vakul̤at tārāṉai *
mācaṭaiyā maṉattu vaittu maṟavāmal vāḻttutume
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் / arul̤āl̤appĕrumāl̤ ĕmpĕrumāṉār

Word by word meaning

காசினியோர்தாம் இவ்வுலகத்திலுள்ளோர்; வாழ உய்யும் பொருட்டு; கலியுகத்தே பரமபதத்திலிருந்து கலியுகத்தில்; வந்து உதித்து வந்து அவதரித்த; ஆசிரியப் பா திருவாசிரியம் என்னும்; அதனால் பாசுர்ங்களால்; அரு மறை நூல் சிறந்த வேதமாகிற சாஸ்திரத்தை; விரித்தானை அருளிச்செய்தவரும்; தேசிகனை எல்லோருக்கும் ஆசிரியரும்; திகழ் வகுள மகிழம்பூ மாலை; தாரானை அணிந்தவருமான; பராங்குசனை நம்மாழ்வாரை; மாசடையா குற்றமற்ற; மனத்து வைத்து மனத்தில் வீற்றிருக்க வைத்து; மறவாமல் மறவாமல்; வாழ்த்துதுமே! வாழ்த்திடுவாய்