TM 27

அரங்கனுக்கு அடிமைசெய்யத் தயங்குகின்றேனே!

898 குரங்குகள்மலையைநூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடி *
தரங்கநீரடைக்க லுற்ற சலமிலாவணிலும்போலேன் *
மரங்கள்போல்வலியநெஞ்சம் வஞ்சனேன், நெஞ்சுதன்னால் *
அரங்கனார்க்காட்செய்யாதே அளியத்தேனயர்க்கின்றேனே.
898 kuraṅkukal̤ malaiyai nūkkak * kul̤ittut tām puraṇṭiṭṭu oṭi *
taraṅka nīr aṭaikkal uṟṟa * calam ilā aṇilum poleṉ **
maraṅkal̤ pol valiya nĕñca * vañcaṉeṉ nĕñcu taṉṉāl *
araṅkaṉārkku āṭ cĕyyāte * al̤iyatteṉ ayarkkiṉṟeṉe (27)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

898. I am like the innocent squirrel that went to Rāma for refuge after rolling and immersing itself in the wave-filled water as it tried to help the monkeys when they took mountains to build the bridge for Rāma to go to Lankā. My heart is as hard as wood and I am a bad person. I have not served the lord of Srirangam with my mind and am tired and wretched.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.27

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரங்குகள் வானரவீரர்கள்; மலையை மலைகளை; நூக்க தள்ளிக்கொண்டு வர; குளித்துத் தாம் நீரிலே முழுகி; புரண்டிட்டுஓடி மணலிலே புரண்டு ஓடி; தரங்கநீர் கடலை; அடைக்கல் உற்ற தூர்ப்பதிலே; சலம் இலா கபடமற்ற; அணிலும் அணில்கள் போலக்கூட; போலேன் நான் எதுவும் செய்யவில்லை; மரங்கள் போல் மரங்களைப் போலே; வலிய கடினமான; நெஞ்ச நெஞ்சையுடையவனாய்; வஞ்சனேன் வஞ்சநையில் ஈடுபட்டுள்ளவனாய்; அளியத்தேன் கைங்கர்யம் செய்திருக்கக்கூடிய நான்; அரங்கனார்க்கு எம்பெருமானார்க்கு; நெஞ்சு தன்னால் மனதார; ஆட்செய்யாதே கைங்கர்யம் செய்யாமல் காலத்தை; அயர்க்கின்றேனே! வீணாக்கினேனே!
kurangugal̤ monkey warriors (to carry out a little bit of kainkaryam to prove their basic nature of servitorship); malaiyai mountains; nūkka pushing them; thām they; kul̤iththu immersing in water; puraṇdittu (after that) rolling in the sand on the shore; ŏdi running; tharangam nīr ocean frothing with waves; adaikkal uṝa engaged in blocking; salam ilā without deceit; aṇilum pŏlĕn (ī am) not like the squirrels; marangal̤ pŏl like the trees; valiya nenjam having hardened mind; vanjanĕn engaged in deceit; al̤iyaththĕn (qualified for all services) me, having eminence; aranganārkku to thiruvarangan (ṣrī ranganāthan); nenju thannāl wholeheartedly; āl̤ seyyādhĕ not carrying out service; ayarkkinṛĕnĕ standing foolishly, forgetting

Detailed WBW explanation

Kuraṅgugal̤ malaiyai nūkka – Āzhvār has employed the plural form for monkeys and the singular for the mountain, signifying that the number of monkeys vastly exceeded that of the mountains, with each mountain being moved by numerous monkeys to construct a pathway across the ocean. This is akin to a scenario in a school where, if a teacher requests students to fetch

+ Read more