TM 13

அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்துவிடும்

884 எறியுநீர்வெறி கொள்வேலை மாநிலத்துயிர்களெல்லாம் *
வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த *
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் *
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.
884 ĕṟiyum nīr vĕṟikŏl̤ velai * mānilattu uyirkal̤ ĕllām *
vĕṟikŏl̤ pūntul̤ava mālai * viṇṇavarkoṉai etta **
aṟivu ilā maṉicar ĕllām * araṅkam ĕṉṟu azhaipparākil *
pŏṟiyil vāzh narakam ĕllām * pul ĕzhuntu ŏzhiyum aṉṟe (13)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

884. All the creatures of this wide earth surrounded by oceans with rolling waves worship the king of the gods in the sky adorned with a fragrant blooming thulasi garland. If ignorant people praise Srirangam, all the hells that have been created for them because of their enjoyment of the senses will be destroyed and disappear.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.13

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எறியும் நீர் அலைகள் வீசுகின்ற நீரையும்; வெறிகொள் துர்நாற்றத்தையும் உடைய; வேலை கடலால் சூழ்ந்த; மானிலத்து இந்தப் பூஉலகிலுள்ள; உயிர்கள் எல்லாம் மனிதர்கள் எல்லாம்; வெறிகொள் நல்ல பரிமளமுடைய; பூந் துளவ துளசி மாலை; மாலை அணிந்துள்ள; விண்ணவர் தேவாதி தேவனான; கோனை திருமாலை; ஏத்த துதிக்கவே இருக்கிறார்கள்; அறிவுஇலா இந்த தத்துவ ஞானம் இல்லாத; மனிசர் எல்லாம் மனிதர்கள் எல்லாம்; அரங்கம் என்று பக்தியோடு ஸ்ரீரங்கமென்று; அழைப்பராகில் சொல்லுவர்களானால்; பொறியில் இந்திரியங்களுக்கு; வாழ் கட்டுப்பட்டு வாழ்கின்ற; நரகம் நரகம் போன்ற; எல்லாம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும்; புல் எழுந்து புல் முளைத்து; ஒழியும் அன்றே பாழாகி விடுமன்றோ
eṛiyum nīr water with lapping waves; veṛikol̤ (from the meat) having bad odour; vĕlai surrounded by ocean; mānilaththu uyirgal̤ ellam all the chĕthanars (sentient entities) on this huge mass of land called earth; veṛi kol̤ having sweet fragrance; pūm beautiful; thul̤aba mālai adorning thul̤asi (basil) garland; viṇṇavar kŏnai the lord of nithyasūris [ṣrivaikuṇtanāthan]; ĕththa (are meant to) only worship; aṛivu ilā manisar ellām these men without any knowledge; arangam enṛu azhaippar āgil if they say “thiruvarangam” [ṣrīrangam]; poṛiyil vāzh living, controlled by the senses; naragam ellām this entire world, which is like narakam (hell); pul ezhundhu sprouting grass; ozhiyum anṛĕ will it not go waste?

Detailed WBW explanation

Eṛiyum nīr veṛi koḷ vēlai mānilattu uyirgaḷ ellām – All the creatures residing on this vast earth, encircled by oceans with surging waves and the scent of fish. The āzhvār employs the term "Eṛiyum nīr" to denote that these chetanās (sentient beings), who are destined to dwell comfortably in the expansive Paramapadham (Srīvaikuṇṭham), live like crowded jackals caught

+ Read more