TCV 97

நான் உய்யும் உபாயத்தை எனக்கு அளித்திடு

848 வெய்யவாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்துசீர்க்
கைய * செய்யபோதில்மாது சேரும்மார்ப! நாதனே! *
ஐயிலாயஆக்கைநோய் அறுத்துவந்துநின்னடைந்து *
உய்வதோருபாயம்நீ எனக்குநல்கவேண்டுமே.
848 vĕyya āzhi caṅku taṇṭu * villum vāl̤um entu cīrk
kaiya * cĕyya potil mātu * cerum mārpa nātaṉe **
aiyil āya ākkai-noy * aṟuttu vantu niṉ aṭaintu *
uyvatu or upāyam nī * ĕṉakku nalka veṇṭume (97)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

848. In your beautiful hands you carry a discus, conch, club, bow and sword. O lord with Lakshmi seated on a red lotus on your chest, give me your grace so I will be saved from the births that give sickness and sorrow. Show me a way to come to you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெய்ய ஆழி கொடிய சக்கரம்; சங்கு தண்டு சங்கு கதை; வில்லும் வாளும் வில் வாள்; ஏந்து இவற்றைத் தரிக்கும்; சீர் கைய! அழகிய கைகளை உடையவனே!; செய்ய போதில் செந்தாமரை மலரில்; மாது பிறந்த மஹாலக்ஷ்மி; சேரும் மார்ப! வஸிக்கும் மார்பை உடையவனே!; நாதனே! நாதனே!; ஐயில் ஆய இயற்கையாக; ஆக்கை சரீரத்துக்கு வரும்; நோய் பல்வேறு நோய்களை; அறுத்து வந்து தொலைத்து வந்து; நின் அடைந்து உன்னை அடைந்து; உய்வது கைங்கர்யம் செய்து வாழ; ஓர் உபாயம் ஒரு உபாயம்; எனக்கு நீ நீ எனக்கு; நல்க வேண்டுமே தந்து அருள வேண்டும்