TCV 90

நின் பாதமின்றி மற்றோர் பற்றிலேன்

841 குலங்களாயஈரிரண்டில் ஒன்றிலும்பிறந்திலேன் *
நலங்களாயநற்கலைகள் நாவிலும்நவின்றிலேன் *
புலன்களைந்தும்வென்றிலேன் பொறியிலேன்புனித! * நின்
இலங்குபாதமன்றி மற்றொர்பற்றிலேனெம்மீசனே!
841 குலங்களாய ஈரிரண்டில் * ஒன்றிலும் பிறந்திலேன் *
நலங்களாய நற்கலைகள் * நாலிலும் நவின்றிலேன் **
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் * பொறியிலேன் புனித * நின்
இலங்கு பாதம் அன்றி * மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே (90)
841 kulaṅkal̤āya īriraṇṭil * ŏṉṟilum piṟantileṉ *
nalaṅkal̤āya naṟkalaikal̤ * nālilum naviṉṟileṉ **
pulaṉkal̤ aintum vĕṉṟileṉ * pŏṟiyileṉ puṉita * niṉ
ilaṅku pātam aṉṟi * maṟṟu ŏr paṟṟu ileṉ ĕm īcaṉe (90)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

841. I was not born in one of the four varnas. I have not learned any of the good arts and do not recite the Vedās with my tongue. I have not conquered the joy given by the senses. O pure one, I have no good knowledge and I have no refuge except your shining feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பொறியிலேன் சப்தாதி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; புலன்கள் ஐந்தும் பஞ்சேந்திரியங்களையும்; வென்றிலேன் ஜெயிக்கவில்லை; நலங்களாய நன்மைதரக் கூடிய; நற்கலைகள் வேதங்கள்; நாலிலும் நான்கையும்; நவின்றிலேன் கற்றிலேன்; ஈரிரண்டில் நான்கு; குலங்களாய வர்ணங்களுக்குள்; ஒன்றிலும் ஒரு வர்ணத்திலும் நான்; பிறந்திலேன் பிறக்கவில்லை; புனித பரிசுத்தமான எம்பெருமானே!; நின் உன்னுடைய; இலங்கு ஒளிமிக்க; பாதம் அன்றி திருவடிகளை அடைவது தவிர; மற்று ஒர் வேறு ஒரு மார்க்கம்; பற்று இலேன் தெரியவில்லை எனக்கு; எம் ஈசனே! எம்பெருமானே!