TCV 63

திருவெஃகாவில் கிடந்தது ஏன்?

814 நன்றிருந்துயோகநீதி நண்ணுவார்கள்சிந்தையுள் *
சென்றிருந்துதீவினைகள் தீர்த்ததேவதேவனே! *
குன்றிருந்தமாடநீடு பாடகத்தும்ஊரகத்தும் *
நின்றிருந்து, வெஃகணைக்கிடந்தது என்னநீர்மையே?
814 naṉṟu iruntu yoka nīti * naṇṇuvārkal̤ cintaiyul̤ *
cĕṉṟu iruntu tīviṉaikal̤ tīrtta tevatevaṉe **
kuṉṟu irunta māṭam nīṭu * pāṭakattum ūrakattum *
niṉṟu iruntu vĕḵkaṇaik kiṭantatu * ĕṉṉa nīrmaiye? (63)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

814. You, the god of gods, remove the bad karmā of those who do yoga and approach you. In Padagam, filled with beautiful palaces and hills, you are in a seated form and in Tiruvuragam, you stand, but why are you lying down in Thiruvekka?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்று இருந்து யோகாப்யாஸ ஆஸனத்திலே; யோக நீதி த்யானயோகமாகிற உபாயத்தாலே; நண்ணுவார்கள் உன்னை அடைய விரும்புபவர்களின்; சிந்தையுள் சென்று மனதில்; இருந்து ப்ரவேசித்து; தீவினைகள் அவர்களுடைய கொடிய பாபங்களை; தீர்த்த போக்கியருளும்; தேவதேவனே தேவாதி தேவனே!; குன்று இருந்த மலைகள் போன்ற; மாடம் நீடு உயர்ந்த வீடுகளுடைய; பாடகத்தும் திருப்பாடகத்திலும்; ஊரகத்தும் திருஊரகத்திலும்; நின்று இருந்து நின்றும் இருந்தும்; வெஃகணை திருவெக்காவில்; கிடந்தது சயனித்திருப்பதும்; என்ன நீர்மையே? என்ன எளிமையோ?