TCV 61

கேசனே! எழுந்திருந்து பேசு

812 நடந்தகால்கள்நொந்தவோ? நடுங்குஞாலமேனமாய் *
இடந்தமெய்குலுங்கவோ? விலங்குமால்வரைச்சுரம் *
கடந்தகால்பரந்தகாவிரிக்கரைக்குடந்தையுள் *
கிடந்தவாறெழுந்திருந்துபேசு வாழிகேசனே! (2)
812 ## naṭanta kālkal̤ nŏntavo? * naṭuṅka ñālam eṉamāy *
iṭanta mĕy kuluṅkavo? * ilaṅku māl varaic curam **
kaṭanta kāl paranta * kāvirik karaik kuṭantaiyul̤ *
kiṭantavāṟu ĕzhuntiruntu pecu * vāzhi kecaṉe (61)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

812. Did your feet hurt when you walked with Sita in the forest? Did your body shake when you took the form of a boar and dug up the earth and brought up the trembling earth goddess? You stay in the temple in Kudandai on the bank of the Kaveri where the river spreads into many channels. Get up, come and speak to us. We praise you, O Kesava.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விலங்கு மால் தடையாயிருக்கும்; வரைச்சுரம் பெரிய மலைகள் காடுகள் இவைகளை; கடந்த தாண்டி வந்த; கால் பரந்த பரந்த ப்ரவாஹத்தையுடைய; காவிரிக் கரை காவேரிக்கரையிலுள்ள; குடந்தையுள் திருக்குடந்தையிலே; கிடந்தவாறு சயனித்திருக்கும் காரணத்தை; நடந்த கால்கள் உலகளந்த திருவடிகள்; நொந்தவோ? நொந்ததனாலோ?; ஞாலம் பூமாதேவி காப்பாற்றப்படாமல்; நடுங்க நடுங்கிக்கொண்டிருந்தபோது; ஏனமாய் மஹாவராஹமாய்; இடந்த அவளைக் குத்தி எடுத்த; மெய் குலுங்கவோ? உடல் களைப்போ?; எழுந்திருந்து எழுந்து நின்று; பேசு கேசனே! பேச வேண்டும் கேசவனே!; வாழி உனக்கு மங்களங்கள் உண்டாகுக!