TCV 55

உன் பாதங்களை என் மனத்தில் தங்கவைத்தாயே!

806 மன்னுமாமலர்க்கிழத்தி வையமங்கைமைந்தனாய் *
பின்னுமாயர்பின்னைதோள் மணம்புணர்ந்ததன்றியும் *
உன்னபாதமென்னசிந்தை மன்னவைத்துநல்கினாய் *
பொன்னிசூழரங்கமேய புண்டரீகனல்லையே?
806 மன்னு மா மலர்க் கிழத்தி * வைய மங்கை மைந்தனாய் *
பின்னும் ஆயர் பின்னை தோள் * மணம் புணர்ந்து அது அன்றியும் **
உன்ன பாதம் என்ன சிந்தை * மன்ன வைத்து நல்கினாய் *
பொன்னி சூழ் அரங்கம் மேய * புண்டரீகன் அல்லையே? (55)
806 maṉṉu mā malark kizhatti * vaiya maṅkai maintaṉāy *
piṉṉum āyar piṉṉai tol̤ * maṇam puṇarntu atu aṉṟiyum **
uṉṉa pātam ĕṉṉa cintai * maṉṉa vaittu nalkiṉāy *
pŏṉṉi cūzh araṅkam meya * puṇṭarīkaṉ allaiye? (55)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

806. You are the husband of the everlasting earth goddess who is as beautiful as a flower, and you also married the cowherd girl Nappinnai. You gave me your grace so that I keep your feet in my mind. You are Pundarigan and you stay in Srirangam surrounded by the Ponni river.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மன்னு மா சிறந்த தாமரையில்; மலர்க் கிழத்தி தோன்றிய திருமகளுக்கும்; வைய மங்கை பூமாதேவிக்கும்; மைந்தனாய் நாதனும்; பின்னும் மேலும்; ஆயர் இடைப்பெண்ணான; பின்னை நப்பின்னையின்; தோள் தோளோடே; மணம்புணர்ந்து கலந்தவனும்; அது அன்றியும் அதற்குமேலும்; உன்ன பாதம் உன் பாதங்களை; என்ன சிந்தை என் சிந்தையில்; மன்ன வைத்து பிரியாதபடி வைத்து; நல்கினாய் அருளினவனான நீ; பொன்னி சூழ் காவிரி சூழ்ந்த; அரங்கம் மேய கோயிலிலிருக்கும்; புண்டரீகன் தாமரைபோன்றவன்; அல்லையே? அல்லவோ?