TCV 33

விபீடணனுக்கு அரசளித்தாயே!

784 மின்னிறத்தெயிற்றரக்கன் வீழவெஞ்சரம்துரந்து *
பின்னவற்கருள்புரிந்து அரசளித்தபெற்றியோய்! *
நன்னிறத்தொரின்சொலேழை பின்னைகேள்வ! மன்னுசீர் *
பொன்னிறத்தவண்ணனாய புண்டரீகனல்லையே?
784 miṉ niṟattu ĕyiṟṟu arakkaṉ vīzha * vĕñcaram turantu *
piṉṉavaṟku arul̤ purintu * aracu-al̤itta pĕṟṟiyoy **
naṉṉiṟattu ŏr iṉcŏl ezhai * piṉṉai kel̤va maṉṉu cīr *
pŏṉ niṟatta vaṇṇaṉ āya * puṇṭarīkaṉ allaiye? (33)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

784. Shooting your cruel arrows you destroyed Rāvana whose teeth were as bright as lightning, and you gave your grace to Vibhishanā and the kingdom of Lankā. You are the beloved of Nappinnai, the innocent woman with sweet words and a lovely color. Aren’t you the lotus-eyed god who have everlasting fame and a golden color?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் நிறத்து மின்னல் போன்ற ஒளியுடைய; எயிற்று அரக்கன் பற்களையுடைய இராவணன்; வீழ வெஞ்சரம் மாளும்படி கொடிய அம்புகளை; துரந்து பிரயோகித்து அவனை முடித்து; பின்னவற்கு அவனது தம்பியான வீடணனுக்கு; அருள் புரிந்து அருள் புரிந்து; அரசு அளித்த அரசு அளித்த; பெற்றியோய் எம்பெருமானே!; நன்நிறத்து நல்ல நிறத்தையுடைய; ஓர் இன்சொல் மதுரமான வாக்கையுடைய; ஏழை அதி சபலையுமான; பின்னை கேள்வ! நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனே!; மன்னுசீர் கல்யாண குணங்களையுடைய; பொன்நிறத்த பொன்போன்ற; வண்ணன் ஆய நிறத்தையுடையவனே!; புண்டரீகன் தாமரைபோன்றவன்; அல்லையே நீயே அல்லவா!