TCV 24

பஞ்ச ஆயுதங்களை ஏந்தினாயே!

775 கங்கைநீர்பயந்தபாத பங்கயத்தெம்மண்ணலே! *
அங்கையாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்தினாய்! *
சிங்கமாயதேவதேவ! தேனுலாவுமென்மலர் *
மங்கைமன்னிவாழுமார்ப! ஆழிமேனிமாயனே!
775 kaṅkai nīr payanta pāta * paṅkayattu ĕm aṇṇale *
aṅkai āzhi caṅku taṇṭu * villum vāl̤um entiṉāy **
ciṅkamāya tevateva * teṉ ulāvu mĕṉ malar *
maṅkai maṉṉi vāzhum mārpa * āzhi meṉi māyaṉe (24)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

775. O marvelous one, the water of the Ganges flows from your lotus feet and you carry in your beautiful hands a discus, a conch, a club, a bow and a sword. O god of gods who took the form of a man-lion, the goddess Lakshmi, adorned with beautiful blossoms dripping with pollen, lives on your chest. O Māyan, your body has the blue color of the ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கங்கை நீர் பயந்த கங்கா தீர்த்தத்தை உண்டாக்கின; பங்கயத்து! தாமரை போன்ற; பாத திருவடியையுடைய; எம் அண்ணலே எம்பெருமானே!; அங்கை அழகிய கையிலே; ஆழி சங்கு சக்கரம் சங்கு; தண்டு வில்லும் கதை வில்; வாளும் வாள் ஆகியவைகளை; ஏந்தினாய்! தரித்துக் கொண்டிருப்பவனே!; சிங்கமாய நரசிம்ம மூர்த்தியாயவதரித்த; தேவதேவ! தேவாதி தேவனே!; தேன் உலாவு தேன் பொருந்திய; மென் மலர் மென்மையான தாமரைப் பூவிற் பிறந்த; மங்கை மஹாலக்ஷ்மி; மன்னி வாழும் அகலகில்லேன் என்று வாழும்; மார்ப! மார்பையுடையவனே!; ஆழி மேனி கடல் போன்ற திருமேனியையுடைய; மாயனே! ஆச்சர்யமானவனே!