TCV 22

ஆலிலைமேல் துயின்றாயே!

773 பண்டுமின்றுமேலுமாய் ஓர்பாலனாகி ஞாலமேழ் *
உண்டுமண்டியாலிலைத்துயின்ற ஆதிதேவனே *
வண்டுகிண்டுதண்டுழாய் அலங்கலாய்! கலந்தசீர் *
புண்டரீகபாவைசேரும் மார்ப! பூமிநாதனே.
773 paṇṭum iṉṟum melumāy ŏr * pālaṉāki ñālam ezh *
uṇṭu maṇṭi ālilait tuyiṉṟa * ātitevaṉe **
vaṇṭu kiṇṭu taṇ tuzhāy * alaṅkalāy kalanta cīr *
puṇṭarīkap pāvai cerum mārpa * pūminātaṉe (22)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

773. You, the highest on the earth, the ancient god adorned with a thulasi garland that swarms with bees, are the past, present and future. Taking the form of the child Kannan, you swallowed all the seven worlds and slept on a banyan leaf, you who embrace on your chest the goddess Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டும் ஸ்ருஷ்டிக்கு முன்பும்; இன்றும் ஸ்ருஷ்டிகாலத்திலும்; மேலுமாய் பிரளய காலத்திலும் நிர்வாஹகனாய்; ஞாலம் ஏழ் ஏழு உலகங்களையும்; மண்டி உண்டு விரும்பி உண்ட; ஓர் பாலனாகி ஒரு ஒப்பற்ற சிறு குழந்தையாய்; ஆலிலைத் துயின்ற ஆலிலையில் துயின்ற; ஆதிதேவனே ஆதிதேவனே!; வண்டு கிண்டு வண்டு குடையும்; தண் துழாய் குளிர்ந்த துழாய் மாலையை; அலங்கலாய்! அணிந்தவனே!; கலந்த என்றும் உன்னுடனே; சீர் இருக்கும் குணவதியான; புண்டரீக தாமரை மலரிற் பிறந்த; பாவை மகாலக்ஷ்மி; சேரும் நித்யவாசம் செய்யும்; மார்ப! மார்பையுடையவனே!; பூமி நாதனே! பூமிப்பிராட்டிக்கு நாதனே!