TCV 20

பாம்பணையில் படுத்த காரணம் சொல்

771 கூசமொன்றுமின்றி மாசுணம்படுத்து வேலைநீர் *
பேசநின்றதேவர்வந்து பாடமுன்கிடந்ததும் *
பாசம்நின்றநீரில்வாழும் ஆமையானகேசவா *
ஏசஅன்றுநீகிடந்தவாறு கூறுதேறவே.
771 kūcam ŏṉṟum iṉṟi * mācuṇam paṭuttu velai-nīr *
peca niṉṟa tevar vantu * pāṭa muṉ kiṭantatum **
pācam niṉṟa nīril vāzhum * āmaiyāṉa kecavā *
eca aṉṟu nī kiṭantavāṟu * kūṟu teṟave (20)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

771. Without being shy, you rest on a snake on the ocean and the gods come there and sing and praise you. O Kesava who took the form of a turtle that lives in moss-covered water, why did you do that and allow others to say bad things about you? Tell us so we can understand you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாசம் நின்ற பாசியிருக்கும்; நீரில் வாழும் நீரில் வாழும்; ஆமையான கேசவா! ஆமையாக அவதரித்த கேசவனே!; கூசம் ஒன்றும் இன்றி சிறிதும் கூசாமல்; மாசுணம் படுத்து ஆதிசேஷனைப் படுக்கையாக விரித்து; வேலை நீர் பலகாலமாக கடல் நீரிலே; பேச நின்ற தேவர் பிரம்மாதி தேவர்கள்; வந்து தங்கள் லோகங்களிலிருந்து வந்து; பாட துதிக்கும்படி; முன் ஸ்ருஷ்டி காலம் தொடங்கி; கிடந்ததும் நீ துயின்றதையும்; அன்று உன் திறமை அறியாதோர்; ஏச நீ உன்னை ஏளனம் செய்திட; கிடந்தவாறு மந்திரமலை முதுகிலேசுழல நீ கிடந்ததையும்; தேறவே தெரிந்து கொள்ளும்படி; கூறு நீ அருளிச்செய்ய வேண்டும்