TCV 108

நின்னொடு கூடுமாசையே கொள்வேன்

859 கேடில்சீர்வரத்தனாய்க்கெடும்வரத்தயன்அரன் *
நாடினோடுநாட்டமாயிரத்தன் நாடுநண்ணிலும் *
வீடதானபோகமெய்தி வீற்றிருந்தபோதிலும் *
கூடுமாசையல்லதொன்று கொள்வனோ?குறிப்பிலே.
859 keṭu il cīr varattiṉāyk * kĕṭum varattu ayaṉ araṉ *
nāṭiṉoṭu nāṭṭam-āyirattaṉ * nāṭu naṇṇiṉum **
vīṭatu āṉa pokam ĕyti * vīṟṟirunta potilum *
kūṭum ācai allatu ŏṉṟu * kŏl̤vaṉo kuṟippile? (108)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

859. Even if I received faultless boons and could go to the world of Nanmuhan filled with abundant and indestructible wealth or the world of Shivā who has the power of destroying the world or the world of thousand-eyed Indra, even if I could have all the pleasures of Mokshā, I would not accept or think of anything except to be with you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேடு இல் அழிவில்லாத; சீர் வரத்தனாய் செல்வமாகிய வரம் பெற்ற; அயன் பிரமனுடையதும்; கெடும் வரத்து ஸம்ஹரிப்பதை வரமாகப் பெற்ற; அரன் சிவனுடையதும்; நாடினோடு ஆகிய நாடுகளோடு கூட; ஆயிரத்தன் ஆயிரங்கண்ணுடைய; நாட்டம் இந்திரனின்; நாடு நாட்டையும்; நண்ணினும் நான் பெற்றாலும்; வீடது ஆன மோக்ஷம்; போகம் என்ற போகத்தை; எய்தி வீற்றிருந்த பெற்று குறைவற்று வீற்றிருக்க; போதிலும் பெறுவதானாலும்; கூடும் உன்னை அடையவேண்டும்; ஆசை என்கிற ஆசை; அல்லது ஒன்று ஒன்றைத் தவிர; குறிப்பிலே மனதிலே வேறு; கொள்வனோ? ஒன்றை விரும்புவேனா?