RNA 98

மனமே! இராமானுசனே சரணம் என்று கூறு

3990 இடுமே? இனியசுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே? அவற்றைத்தொடர்தருதொல்லை * சுழல்பிறப்பில்
நடுமே? இனிநம்மிராமானுசன் நம்மைநம்வசத்தே
விடுமே? சரணமென்றால் * மனமே! நையல்மேவுதற்கே. (2)
3990 ## iṭume iṉiya cuvarkkattil? * iṉṉum narakil iṭṭuc
cuṭume? avaṟṟait * tŏṭar taru tŏllai ** cuzhal piṟappil
naṭume? iṉi nam irāmānucaṉ nammai nam vacatte *
viṭume? caraṇam ĕṉṟāl * maṉame naiyal mevutaṟke (98)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-20, 21

Simple Translation

3990. Those who are born can only reach Mokshā, or go to hell to be born on the earth again and again. O mind, if you worship the lord he will give you Rāmānujā, and you will not have any suffering.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம் இராமாநுசன் நம் இராமாநுசரே உமது திருவடிகளே; சரணம் என்றால் சரணம் என்று நாம் சொன்னால்; இனிய சுவர்க்கத்தில் இனிய ஸ்வர்க்கத்தில் நம்மை; இடுமே? சேர்த்திடுவாரோ?; இன்னும் நரகில் அல்லது நரகத்தில்; இட்டுச் சுடுமே? தள்ளி தஹிக்கச் செய்வாரோ?; அவற்றை அவற்றை; தொடர் தரு தொடர்ந்து கிடக்கும்; தொல்லை சுழல் தொன்மையாக சுழன்று வரும்; பிறப்பில் நடுமே? பிறப்பில் நிறுத்துவாரோ?; இனி நம்மை மேலுள்ள காலங்களில் நம்மை; நம் வசத்தே நாம் போகிற; விடுமே? வழியேவிட்டு வைப்பரோ?; மனமே! ஓ மனமே!; மேவுதற்கே பேறு பெறும் விஷயமாக; நையல் நீ கரைந்திட வேண்டாம்
irāmānusan emperumānār; nam who incarnated to lift us up,; charaṇam enṛāl if we just said just one sentence that you are the shelter (charaṇam),; idumĕ would he keep us; suvarggaththil in heaven,; innam even after surrendering to his divine feet; sudumĕ would he burn us; ittu by keeping; naragil in hell;; nadumĕ would he set us up; piṛappil in birth; thollai which is eternal; suzhal and make us go in such cycles,; thodar tharu which follow; avaṝai heaven and hell;; ini during the remaining time of future; nammai vidumĕ would he let us be; nam vasaththĕ as per our interest;; manamĕ ŏh mind,; naiyal do not become weak; mĕvudhaṛku about attaining the goal.; mĕvu match/fit; that is, attaining;; nadumĕ establishing/setting us in a place;