RNA 92

இராமானுச! எனக்கும் அருள் செய்தாயே! காரணம் என்ன?

3984 புண்ணியநோன்பு புரிந்துமிலேன் * அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி நுவன்றுமிலேன் * செம்மைநூற் புலவர்க்கு
எண்ணருங்கீர்த்தியிராமானுச! இன்றுநீபுகுந்து என்
கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும் * நின்றவிக்காரணம் கட்டுரையே.
3984 puṇṇiya noṉpu purintum ileṉ * aṭi poṟṟi cĕyyum
nuṇ arum kel̤vi * nuvaṉṟum ileṉ ** cĕmmai nūl pulavarkku
ĕṇ arum kīrtti irāmānuca iṉṟu nī pukuntu * ĕṉ
kaṇṇul̤l̤um nĕñcul̤l̤um * niṉṟa ik kāraṇam kaṭṭuraiye (92)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3984. I have not done proper nombus, or praised you well or worshiped your feet. O Rāmānujā of matchless fame, praised by good poets who know all the sastras, you have entered my heart and my eyes. Tell me the reason for this.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செம்மை நூல் சிறந்த நூல்களைக் கற்ற; புலவர்க்கு புலவர்களாலும்; எண் அரும் அளவிட முடியாத; கீர்த்தி கீர்த்தியையுடைய; இராமாநுச! இராமாநுசரே!; புண்ணிய அடியேன்; நோன்பு புண்ணியம் தரும் நோன்பு; புரிந்தும் இலேன் எதுவும் செய்ததில்லை; அடி உங்கள் திருவடிகளை; போற்றி செய்யும் போற்றும்; நுண் நுட்பமான; அரும் கேள்வி விஷயங்களைக் கேட்டதுமில்லை; நுவன்றும் இலேன் சொன்னதும் இல்லை; இன்று என் இன்று என்; கண்ணுள்ளும் கண்ணினுள்ளேயும்; நெஞ்சுள்ளும் நீ நெஞ்சினுள்ளேயும் நீங்கள் வந்து; புகுந்து நின்ற புகுந்து நிற்க; இக் காரணம் காரணம் என்ன; கட்டுரையே என்பதைக் கூறவேண்டும்
purindhum ilĕn have not practiced any; puṇṇiya nŏnbu performance of any holy austerity for such benefit (of you getting me);; pŏṝi seyyum to reach; adi the divine feet (of yours),; nuvanṛum ilĕn have not even thought about hearing/learning; arum the hard to obtain; nuṇ subtle/deep; kĕl̤vi meanings that are learned by listening (ṣravaṇam);; keerththi irāmānusā ŏh emperumānār having many glories!; eṇṇarum for which it is hard to find boundary; semmai for those having quality of not wishing for other benefits (ananya prayŏjanar); pulavarkku who are able to recite; nūl poems in the form of ṣāsthram;; inṛu today / now; nee your highness having such unmatched greatness; ugandhu are happily; ninṛa present with significance; en in my; kaṇṇul̤l̤um eyes, and; nenjul̤l̤um inner eyes (mind); katturai your highness! please explain yourself; ik kāraṇām the reason for this (presence);; kattrurai please tell (me); katturai is a full word;; purindhu doing; nuvanṛu saying; semmai beautiful / pure; by this it refers to not expecting other benefits (ananya prayŏjanam).