RNA 87

இராமானுச ஞானம் பெறாதவரைக் கலி வருத்தும்

3979 பெரியவர்பேசிலும்பேதையர்பேசிலும் * தங்குணங்கட்கு
உரியசொல் லென்றுமுடையவனென்றென்று * உணர்வில்மிக்கோர்
தெரியும்வண்கீர்த்தியிராமானுசன்மறைதேர்ந்துஉலகில்
புரியுநல்ஞானம் * பொருந்தாதவரைப்பொரும்கலியே.
3979 pĕriyavar pecilum petaiyar pecilum * taṉ kuṇaṅkaṭku
uriyacŏl ĕṉṟum * uṭaiyavaṉ ĕṉṟu ĕṉṟu ** uṇarvil mikkor
tĕriyum vaṇ kīrtti irāmānucaṉ * maṟai terntu ulakil
puriyum nal ñāṉam * pŏruntātavarai pŏrum kaliye (87)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3979. Whether people are intelligent or ignorant they know Rāmānujā has a good nature and is famous. If people are unwise and do not learn the words of Rāmānujā, poverty will come to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரியவர் பேசிலும் ஞானிகள் பேசினாலும்; பேதையர் ஒன்றும் அறியாதவர்கள்; பேசிலும் பேசினாலும்; தன் குணங்கட்கு தம் குணங்களுக்கு; உரியசொல் ஏற்ற சொற்களை; என்றும் உடையவன் எப்போதும் உடையவர்; என்று என்று என்று பலகாலும் சொல்லி; உணர்வில் மிக்கோர் சிறந்த ஞானிகள்; தெரியும் வண் கீர்த்தி போற்றும் கீர்த்தியை உடையவரான; இராமாநுசன் இராமாநுசர்; மறை தேர்ந்து வேதங்களை ஆராய்ந்து; உலகில் புரியும் இவ்வுலகில் உபதேசித்து அருளின; நல் ஞானம் நல்ல ஞானத்தில்; பொருந்தாதவரை சேராதவர்களை; கலியே பொரும் கலிபுருஷன் துன்புறுத்துவான்
periyavar ṭhose having intellect and ability to speak; such enriched people; pĕsilum if they speak, or,; pĕdhaiyar those having the limit or lack of knowledge and ability, such poor people; pĕsilum if they speak also,; tham guṇagatkuriya in this way they can speak based on their (respective) qualities,; sol words according to his nature, form, quality, and place; enṛum at all times,; udaiyavan enṛenṛu that he possess such (quality of being described in such words);; uṇarvil mikkŏr people having knowledge; theriyum think through many times and involve in it; vaṇ keerththi having such divine glory; irāmānusan is emperumānār, who; thĕrndhu investigated; maṛai vĕdham; ulagil in the world, and; puriyum helped by giving; nal gyānam distinguished knowledge;; porundhādhavarai for those not joining / taking up that (advice); kali porum kali would gain upper hand and oppress them.; ; uriya apt (words); udaiyavar – lord;; ; vaṇmai beauty;