RNA 80

இராமானுசனின் அடியார்களுக்கே நான் தாஸன்

3972 நல்லார்பரவும் இராமானுசன் * திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை மறவாதவர்கள்யவர் * அவர்க்கே
எல்லாவிடத்திலுமென்றுமெப்போதிலுமெத்தொழும்பும்
சொல்லால்மனத்தால் * கருமத்தினால்செய்வன் சோர்வின்றியே.
3972 nallār paravum irāmānucaṉ * tirunāmam nampa
vallār tiṟattai * maṟavātavarkal̤ ĕvar ** avarkke
ĕllā iṭattilum ĕṉṟum ĕppotilum ĕt tŏzhumpum *
cŏllāl maṉattāl * karumattiṉāl cĕyvaṉ corvu iṉṟiye (80)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3972. If the devotees worship the divine name of Rāmānujā and think of his power only I will be a slave for those good people. At all times, in all places, and in all conditions I will serve him tirelessly with my mind and body.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்லார் சான்றோர்களால்; பரவும் கொண்டாடப்படும்; இராமாநுசன் இராமாநுசனின்; திருநாமம் நம்ப திருநாமத்தை தஞ்சமாக நம்பும்; திறத்தை வல்லார் திறத்தையுடைய வல்லவர்கள்; மறவாதவர்கள் மறவாமல் சிந்திப்பவர்கள்; எவர் எவரோ; அவர்க்கே அந்த இராமாநுச பக்தர்களுக்கே; எல்லா இடத்திலும் எல்லா இடங்களிலும்; என்றும் எப்போதிலும் என்றும் எப்போதும்; எத் தொழும்பும் எல்லாவித கைங்கர்யங்ளையும்; சொல்லால் மனத்தால் சொல் மனம்; கருமத்தினால் செயல் என்னும் முக்கரணத்தாலும்; சோர்வு இன்றியே சோர்வு இன்றியே; செய்வன் அடியேன் செய்வேன்
nallār ās said in nallār navil kurugūr nagarān [thiruviruththam 100] (those having auspicious qualities and good actions praise nammāzhvār who incarnated in thirukkurugūr (āzhvār thirunagari)), all the noble ones; paravum from their respective places, based on love, they praise; irāmānsan emperumānār; his –; thirunāmam divine name; as said by kūraththāzhvān in nachĕth rāmānujĕthyĕshā chathurā chathuraksharee – kāmavasthām prapadhyanthĕ janthavŏ hantha mādhruṣa: (īf there wasnt this powerful four letter word rā.mā.nu.ja, ŏh! what state would the animals like me be in), such divine name; namba vallār thiṛaththai which they can consider as their shelter; such peoples ways; maṛavādhavargal̤ yavar is always thought about; yāvar by some few people –; avarkkĕ only to them; ella idaththilum in all the places; enṛum at all times,; eppŏdhilum at all situations / conditions,; eththozhumbum by all types/forms of subservience; sollāl by voice; manaththāl by mind; karumaththināl by body (physically); as said by thanakkĕyāga [thiruvāimozhi 2.9.4] (emperumān should accept my service only for ḥis benefit/enjoyment),; sŏrvinṛich cheyvan will do without any separate enjoyment (pruthak rasam); nambu having faith; also, liking (of emperumānārs divine name);; thozhumbu slave/subservient.; sŏrvu deviation.