ஏழாம் பாட்டு – பெரிய ஜீயர் உரை – அவதாரிகை – இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்