RNA 62

இராமானுசனைப் பணிந்து இருவினைப் பாசம் போக்கினேன்

3954 இருந்தேனிருவினைப் பாசம்கழற்றி * இன்றியானிறையும்
வருந்தேன்இனி எம்மிராமானுசன் * மன்னுமாமலர்த்தாள்
பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கொன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும் * பெரியோர்தங்கழல்பிடித்தே.
3954 irunteṉ iru viṉaip pācam kazhaṟṟi * iṉṟu yāṉ iṟaiyum
varunteṉ iṉi ĕm irāmānucaṉ ** maṉṉu mā malart tāl̤
pŏruntā nilai uṭaip puṉmaiyiṉorkku ŏṉṟum naṉmai cĕyyāp *
pĕrun tevaraipparavum * pĕriyor tam kazhal piṭitte (62)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3954. I have removed the desire caused by my karmā and have no worries. I worship only the feet of the devotees who praise the beautiful lotus feet of Rāmānujā— I will not worship the gods who do nothing good for the devotees of my lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் இராமாநுசன் ஸ்வாமி இராமாநுசரின்; மன்னு மா மலர்த் தாள் சிறந்த திருவடித்தாமரைகளில்; பொருந்தா நிலை உடை சேராத ஸ்வபாவத்தையுடைய; புன்மையினோர்க்கு தாழ்ந்தவர்களுக்கு பெருமான்; ஒன்றும் ஒருவிதமான; நன்மை செய்யா உபகாரமும் செய்யமாட்டான்; பெரும் தேவரை பெரிய பெருமாளை; பரவும் போற்றுகின்ற; பெரியோர் தம் ஆழ்வானாகிற கூரத்தாழ்வானுடைய; கழல் பிடித்தே திருவடிகளை; இன்று இன்று ஆச்ரயித்த பின்பு; இருவினைப் பாசம் புண்ணியம் பாவமென்ற; கழற்றி இரண்டு கர்மங்களிலிருந்தும்; இருந்தேன் விடுபட்டவனானேன்; யான் இனி இப்படிப்பட்ட அடியேன்; இறையும் இனிமேல் கொஞ்சமும்; வருந்தேன் வருந்த மாட்டேன்
em head of our clan; iraāmānusan emperumānārs; mannu well set matching each other; most worshippable; malar and most enjoyable; thāl̤ divine feet; porundhā not joining; nilay udai in the state of; punmayinŏrkku ones having the bad nature; onṛum at any place; nanmai seyyā do any good things; perum thĕvarai ṣrīvaishṇavas who are equivalent to the lord; paravum losing to their nature and praising them; periyŏr those having great glories; kazhal pidiththu surrendering to the divine feet of ,; inṛu today; iru being in two ways based on good and bad deeds; vinaip pāsam kazhaṝi got liberated from the ties of karmas; irundhĕn thus achieving the objective and being ardent;; yān ī who was being like this; ini here after; iṛaiyum even a little bit; varundhĕn not be involved in sorrows.; ; ; ;