RNA 6

இராமானுசனின் பெரும்புகழ் கூற முயல்கின்றேன்

3898 இயலும்பொருளும் இசையத்தொடுத்து * ஈன்கவிகள்அன்பால்
மயல்கொண்டுவாழ்த்துமிராமானுசனை * மதியின்மையால்
பயிலும்கவிகளில்பத்தியில்லாதவென்பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் * அவன்றன்பெருங்கீர்த்திமொழிந்திடவே.
3898 iyalum pŏrul̤um icaiyat tŏṭuttu * īṉ kavikal̤ aṉpāl
mayal kŏṇṭu vāzhttum irāmānucaṉai ** mati iṉmaiyāl
payilum kavikal̤il patti illāta ĕṉ pāvi nĕñcāl *
muyalkiṉṟaṉaṉ * avaṉ taṉ pĕruṅ kīrtti mŏzhintiṭave (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3898. Great poets will celebrate by stringing poems with words and meanings, with lot of love and infatuation towards emperumAnAr. I do not have such devotion and I have a sinful mind too. I am attempting to convey his infinite greatness, with my ignorant mind, in the pAsurams that I have composed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈன் கவிகள் இனிய கவிகள்; அன்பால் அன்பால்; இயலும் பொருளும் சொல்லும் பொருளும்; இசைய நன்கு பொருந்தும்படி; தொடுத்து தொடுத்து; மயல் கொண்டு அதிலேயே பரவசமடைந்து; வாழ்த்தும் வணங்கி வாழ்த்தும்படி நின்ற; இராமாநுசனை இராமாநுசனை; பயிலும் கவிகளில் வர்ணிக்கின்ற பாடல்களில்; பத்தி இல்லாத பத்தி இல்லாத; என் பாவி நெஞ்சால் என் பாவி நெஞ்சால்; அவன் தன் அந்த இராமாநுசரின்; பெருங்கீர்த்தி அளவற்ற கீர்த்திகளைப்; மொழிந்திடவே பேசுவதற்கு; மதி இன்மையால் புத்தியில்லாமையினால்; முயல்கின்றனன் முயல்கின்றேன்
een kavigal̤ distinguished poets; mayal koṇdu lose their state; anbāl due to love; vāzhththum and praise; irāmānusanai emperumānār,; iyalum by words (formation); porul̤um and meaning; isaiyath thoduththu that are matched together;; muyalginṛanan (but ī am) trying,; en (using) my; pāvi nenjāl mind of bad qualities/karmas; paththi illādha which does not have (their level of) devotion (towards emperumānār); kavigal̤il (and towards) poems; payilum developed (by them),; madhi inmaiyāl (and) due to my foolishness; mozhindhida (ī am trying) to talk about; avan than his (emperumānārs); perum kīrthi limitless glory.; payilum kavigal̤il through my creation of poems,; mozhindhida muyalginṛanan trying to praise his names;; pāvi nenjāl along with my mind of arrogance/ignorance.