RNA 48

இராமானுச! என் இழிகுணத்திற்கு நின்னருளே கதி நின்னருளுக்கும் நானே இடம்

3940 நிகரின்றிநின்ற என்நீசதைக்கு * உன்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை அருட்குமஃதேபுகல் * புன்மையிலோர்
பகரும்பெருமையிராமானுச! இனிநாம்பழுதே
அகலும்பொருளென்? * பயனிருவோமுக்குமான பின்னே.
3940 nikar iṉṟi niṉṟa ĕṉ nīcataikku * uṉ arul̤iṉkaṇ aṉṟip
pukal ŏṉṟum illai * aruṭkum aḵte pukal ** puṉmaiyilor
pakarum pĕrumai irāmānuca iṉi nām pazhute *
akalum pŏrul̤ ĕṉ * payaṉ iruvomukkum āṉa piṉṉe? (48)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3940. I, a mean person, can be saved only by your grace— I have no other refuge. We both need each other. What is the use if you do not come and stay with me, O Rāmānujā, praised by faultless devotees?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன்மையிலோர் மஹான்களால்; பகரும் பெருமை புகழப்படும் பெருமையுடையவரே; நிகர் இன்றி நின்ற என்னுடைய ஒப்பற்ற; என் நீசதைக்கு தாழ்மைக்கு; உன் உங்களுடைய; அருளின் கண் அன்றி அருளைத் தவிர; புகல் ஒன்றும் இல்லை வேறு புகலிடம் இல்லை; அருட்கும் தங்களின் அருளுக்கும்; அஃதே என் போல்வாருடைய; புகல் அந்தத் தாழ்மையே சரணம்; இருவோமுக்கும் பயன் இருவருக்கும் பயன் என்று; ஆன பின்னே ஆன பின்னே; இராமாநுச! இராமாநுசரே!; இனி நாம் பழுதே இனிமேலும் நாம் வீணே; அகலும் பிரிந்திருப்பதற்கு; பொருள் என்? காரணம் என்ன?
nigar inṛi ninṛa īn this world if you analyśed each one separately, that is those not having noble qualities (āthma guṇam) and having plenty of ignoble qualities, there is no one like me who does not have an iota of noble qualities and is complete in ignoble qualities – in this way it stands that there is no one comparable to –; en neesadhaikku me; for such lowness of me;; un your highness who accepts that lowness itself as my offering, your –; arul̤in kaṇ anṛi other than under (your) kindness; pugal onṛum illai there is no shadow to shelter under;; arutkum for that kindness (of yours) too; ahdhĕ only such very lowly ones; pugal are the most suitable receivers; so there is no shelter (for your kindness) other than my lowliness;; irāmānusā ŏh emperumānār!; perumai ẏou having the greatness; punmaiyilŏr pagarum which is talked about by those not having any blemishes,; iruvŏmukku for us both; payan āna pin this has been beneficial; there after; nām for us who have understood this,; porul̤ en what reason would be there; ini in the future; pazhudhĕ agalum in unnecessarily leaving (each other).