RNA 45

இராமானுச! நின் சரணே எனக்குப் பெரும்பேறு!

3937 பேறொன்றுமற்றில்லை நின்சரணன்றி * அப்பேறளித்தற்கு
ஆறொன்றுமில்லைமற்றைச்சரணன்றி * என்றுஇப்பொருளைத்
தேறுமவர்க்குமெனக்குமுனைத்தந்தசெம்மை சொல்லால்
கூறும்பரமன்று * இராமானுச! மெய்ம்மைகூறிடிலே.
3937 peṟu ŏṉṟu maṟṟu illai niṉ caraṇ aṉṟi * ap peṟu al̤ittaṟku
āṟu ŏṉṟum illai maṟṟu ac caraṇ aṉṟi ** ĕṉṟu ip pŏrul̤ait
teṟum avarkkum ĕṉakkum uṉait tanta cĕmmai cŏllāl *
kūṟum param aṉṟu * irāmānuca mĕymmai kūṟiṭile (45)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3937. Devotees understand that there is no better fortune than your feet, our only refuge, and that you are the only path for them. There is no way I can describe in words how we feel about you. We understand the truth only through your good words, Rāmānujā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுச! இராமாநுசரே!; நின் சரண் அன்றி தங்கள் திருவடிகளைத் தவிர; மற்று பேறு வேறு உபாயம்; ஒன்று இல்லை ஒன்றும் இல்லை; அப்பேறு அந்தத் திருவடிகளாகிற உபாயத்தை; அளித்தற்கு அளித்ததற்கு; அச் சரண் அன்றி அந்தத் திருவடிகளைத்தவிர; மற்று ஆறு வேறு உபாயம்; ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை; என்று இப்பொருளை என்ற இவ்வுண்மையை; தேறும் அவர்க்கும் தெளிவாக அறிந்த அறிஞர்களுக்கும்; எனக்கும் எனக்கும்; உனைத்தந்த வித்தியாசம் பாராமல் காட்டித்தந்த; செம்மை சிறந்த குணமானது; மெய்ம்மை உண்மையை; கூறிடிலே சொல்லப்போனால்; சொல்லால் வார்த்தைகளால்; கூறும் சொல்லி முடியாது; பரம் அன்று அநுபவித்து தான் உணரமுடியும்
irāmānusa ŏh udaiyavar!; nin charaṇ anṛi ŏther than the divine feet of your highness,; maṝup pĕṛu onṛillai there is no other goal;; onṛum illai enṛu ṭhat there is no; maṝu āṛu other means; achcharaṇ anṛi other than those divine feet; al̤iththaṛku to give; appĕṛu that goal,; ipporul̤ai is the meaning; thĕṛumavarkkum thought by those who think with faith due to true inner knowledge,; enakkum and to me who did not have faith in it; without seeing that difference between us,; unai thandha semmai the way in which your highness gave yourself and graced (us),; meymmai kūṛidil if truth is to be said,; sollāl kūṛum param anṛu to explain that using words is not being possible; Can only experience it and get immersed in it. is the point.;