RNA 43

இராமானுசன் என்று சொல்லுங்கள்: பற்று நீங்கும்

3935 சுரக்குந்திருவுமுணர்வும் * சொலப்புகில்வாயமுதம்
பரக்கும் இருவினைபற்றறவோடும் * படியிலுள்ளீர்!
உரைக்கின்றனன்உமக்கியான் அறஞ்சீறுமுறுகலியைத்
துரக்கும்பெருமை * இராமானுசனென்று சொல்லுமினே.
3935 curakkum tiruvum uṇarvum * cŏlappukil vāy amutam
parakkum iru viṉai paṟṟu aṟa oṭum ** paṭiyil ul̤l̤īr
uraikkiṉṟaṉaṉ umakku yāṉ aṟam cīṟum uṟu kaliyait *
turakkum pĕrumai * irāmānucaṉ ĕṉṟu cŏllumiṉe (43)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3935. O people of the world, if you praise the divine form of the god and understand him, the results of your good and bad karmā will go away. Worship Rāmānujā and your difficulties will be removed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படியில் உள்ளீர்! உலகத்திலுள்ளவர்களே!; யான் உமக்கு நான் உங்களுக்கு ஒன்று; உரைக்கின்றனன் கூறுகிறேன்; அறம் சீறும் அறமாகிய தர்மத்தை சீறும்; உறு கலியை பிரபலமான கலியை; துரக்கும் பெருமை ஓட்டிவிடும் பெருமை; இராமாநுசன் என்று இராமாநுசரைச் சேரும் என்று; சொல்லுமினே சொல்லுங்கள் அப்படிச் சொன்னால்; திருவும் உணர்வும் பக்தியும் ஞானமும்; சுரக்கும் மேன்மேலும் பெருகும்; சொல அவர் திருநாமத்தைச் சொல்ல; புகில் தொடங்கும் போதே; வாய் அமுதம் பரக்கும் வாயில் அமுதம் ஊறும்; இரு வினை பாபங்கள்; பற்று அற ஓடும் ஓடிவிடும்
padiyil ul̤l̤eer ŏh those who are in the earth which is fortunate due to the incarnation of emperumānār, as said in viṣvambarā puṇyavathee.; yān ī who for sure have understood by experience,; uraikkinṛanan am telling; umakku you who are losing due to not understanding its greatness/difference;; aṛam seeṛum ŏne which cannot tolerate the deeds of dharma,; uṛu kaliyai that is, the kali (yugam), which is staying put dominating,; thurakkum that is, make it run away; perumai having such greatness; irāmānusan enṛu sollumin do the reciting of divine name of such emperumānār;; thiruvum (then) wealth that is devotion,; uṇarvum and knowledge,; surakkum will grow more and more,; and, unlike the one in enṛakkāl aṇṇikkum amudhu ūrum [kaṇṇinuṇ chiruththāmbu 1] (reciting the name of ṣatakŏpan will produce nectar in my tongue),; solap pugil just at the time of starting to recite it itself,; vāy amudham parakkum will spring taste in your mouth;; iru vinai huge sins; paṝaṛa ŏdum will themselves be afraid, and will run away without trace.