RNA 20

நாதமுனியை ரசிக்கும் இராமானுசன் என் பெருஞ்செல்வம்

3912 ஆரப்பொழில்தென்குருகைப்பிரான் * அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப்பயின்றுய்யுஞ்சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும் * இராமானுசன்என்தன்மாநிதியே.
3912 ārap pŏzhil tĕṉ kurukaippirāṉ * amutat tiruvāy
īrat tamizhiṉ icai uṇarntorkaṭku ** iṉiyavar tam
cīraip payiṉṟu uyyum cīlamkŏl̤ nātamuṉiyai * nĕñcāl
vārip parukum * irāmānucaṉ ĕṉ taṉ mā nitiye (20)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3912. The lord gave his grace to Nādamuni who understood the sweetness of Tamil musical pasurams and spread among the people the Thiruvāymozhi of Nammāzhvār, born in southern Thirukkurugai. Rāmānujā who loves Nādamuni in his heart, is my great treasure.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆரப் பொழில் சந்தனச் சோலைகளையுடைய; தென் குருகைப் தென் திருக்குருகூரிலே; பிரான் அவதரித்த நம்மாழ்வாரின்; அமுதத் திருவாய் அமுதமயமான வாயில்; ஈரத் தமிழின் ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின்; இசை இசையை; உணர்ந்தோர்கட்கு அறிந்தவர்களின்; இனியவர் தம் விரும்பத்தக்க இனிய; சீரைப் பயின்று குணங்களைப் பயின்று; உய்யும் உய்ந்த பெரும்; சீலம்கொள் சீலத்தையுடைய; நாதமுனியை நாதமுனிகள் என்னும் ஆசானை; நெஞ்சால் தம் மனத்தாலே; வாரிப் பருகும் பக்தியோடு அநுபவிக்கும்; இராமாநுசன் இராமாநுசன்; என் தன் அடியேனுக்கு; மா நிதியே குறைவற்ற செல்வமாவார்
ārappozhil having arcades of sandalwood; then and beautiful; kurugaip pirān the chief of such thirunagari – āzhvār,; thiruvāi that was born from his divine lips; amudham ultimate enjoyment; eeram having kindness; thamizhin isai the musical thiruvāimozhi; uṇarndhŏrgatku those knowing; iniyavar tham those who are being friendly to them; seerai qualities; payinṛu involved; uyyum seelam kol̤ of the nature of getting the strength of his existence from it; nāthamuniyai nathamunigāl̤; nenjāl by his divine heart; vārip parugum enjoys with great enthusiasm; irāmānusan emperumānār; enṛan mānidhiyĕ is my inexhaustible wealth.; āram sandal(wood)