RNA 18

இராமானுசனே எனக்குப் பெருந்துணை

3910 எய்தற்கரியமறைகளை * ஆயிரமின்தமிழால்
செய்தற்குஉலகில்வரும் சடகோபனை * சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
உய்வதற்குஉதவும் * இராமானுசன்எம்உறுதுணையே.
3910 ĕytaṟku ariya maṟaikal̤ai * āyiram iṉ tamizhāl
cĕytaṟku ulakil varum * caṭakopaṉai ** cintaiyul̤l̤e
pĕytaṟku icaiyum pĕriyavar cīrai uyirkal̤ ĕllām *
uytaṟku utavum * irāmānucaṉ ĕm uṟutuṇaiye (18)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3910. Nammāzhvār composed a thousand pasurams that are like the Vedās, hard to compose, in sweet Tamil and spread them around the world. Rāmānujā helps all the good people of the world keep in their hearts the poet Sadagopan who spread the fame of the highest lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எய்தற்கு அரிய முற்றும் உணரமுடியாத; மறைகளை வேதங்களை; ஆயிரம் இன் இனிய ஆயிரம்; தமிழால் தமிழ்ப் பாசுரங்களால்; செய்தற்கு அருளிச்செய்வதற்காக; உலகில் வரும் இவ்வுலகில் அவதரித்த; சடகோபனை நம்மாழ்வாரை; சிந்தையுள்ளே நம் சிந்தையுள்ளே வைத்து; பெய்தற்கு இசையும் வணங்குவதற்கு இசைந்த; பெரியவர் மதுரகவி ஆழ்வாருடைய; சீரை சிறந்த குணங்களை; உயிர்கள் எல்லாம் உலகத்தோர் அனைவரும்; உய்தற்கு உதவும் உணர்ந்து உஜ்ஜீவிக்க உதவிய; இராமாநுசன் இராமாநுசன்; எம் உறு துணையே எமக்கு உற்றதுணை
eydhaṛku ariya (ḫor every one to get the meanings of ) ḥard to attain; maṛaigal̤ai vĕdhas,; seydhaṛku to divine; āyiram as one thousand pāsurams only; in that too being sweet,; thamizhāl in the language that is easy for women and children to learn too,; ṣatakŏpanai since he prevents those who dont accept or misinterpret vĕdhas, āzhvār having the divine name of ṣatakŏpan; ulagil varum incarnated in the world;; chinthai ul̤l̤ĕ in his divine mind; peydhaṛku isaiyum being apt/qualified to keep (such nammāzhvār) is one; periyavar having such greatness that is madhurakavi āzhvār;; rāmānusan emperumānār; udhavum helps (by showing madhurakavi āzhvārs); seerai divine qualities such as knowledge,; uyirgal̤ ellām uydhaṛku for all the āthmās to reach the true goal; em uṛu thuṇaiyĕ (such emperumānār is) my great companion.