RNA 16

ஆண்டாள் திருவருளால் வாழ்பவன் இராமானுசன்

3908 ## தாழ்வொன்றில்லாமறைதாழ்ந்து * தலமுழுதும்கலியே
ஆள்கின்றநாள்வந்து அளித்தவன்காண்மின் * அரங்கர்மௌலி
சூழ்கின்றமாலையைச்சூடிக்கொடுத்தவள்தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் * இராமானுசனென்னும்மாமுனியே. (2)
3908 ## tāzhvu ŏṉṟu illā maṟai tāzhntu * talam muzhutum kaliye
āl̤kiṉṟa nāl̤ vantu * al̤ittavaṉ kāṇmiṉ ** araṅkar mauli
cūzhkiṉṟa mālaiyaic cūṭik kŏṭuttaval̤ tŏl arul̤āl *
vāzhkiṉṟa val̤l̤al * irāmānucaṉ ĕṉṉum mā muṉiye (16)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3908. The lord of Srirangam saved the world at the end of the eon when it was destroyed by the flood and the Vedās disappeared. Rāmānujā, the great sage praised by the world, is famous through the grace of āndāl, who wore a garland that her father had prepared for the lord Rangan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கர் திருவரங்கன்; மௌலி சூழ்கின்ற திருமுடியில் சூட்டிக்கொள்ளும்; மாலையை பூமாலையை; சூடி தான் சூடிப் பார்த்து; கொடுத்தவள் பின்பு கொடுத்த; தொல் அருளால் ஆண்டாளின் அருளாலே; வாழ்கின்ற வாழ்பவரும்; வள்ளல் உதாரகுணமுடையவருமான; இராமாநுசன் என்னும் இராமாநுசன் என்னும்; மா முனியே மா முனிவர்; தாழ்வு ஒன்று இல்லா ஒரு குறையுமில்லாதிருந்த; மறை தாழ்ந்து வேதமானது இழிவு பெற; தலம் முழுதும் கலியே பூலோகம் முழுதும் கலியே; ஆள்கின்ற ஆட்சி புரியும்; நாள் காலத்திலே; வந்து இங்கே வந்து அவதரித்து; அளித்தவன் அந்த வேதத்தை காத்து அருளினவர்; காண்மின் என்பதை நினைத்துப் பாருங்கள்
arangar periya perumāl̤s; mauli sūzhginṛa malaiyai garland worn on the thirumudi (divine head); sūdik koduththaval̤ wore that in her hair, made it fragrant, and gave ḥim; such glory; such āṇdāl̤s; thol arul̤āl her natural kindness as his water source for growing;; vāzhginṛa val̤l̤al (he) lives due to that; he is extremely generous; māmuni ennum distinguished muni (deliberates); irāmānusan that is emperumānār;; oru thāzhvilla maṛai that is, vĕdham that is not deficient, in being its own reference,; thāzhndhu due to those who do not accept it and those who interpret it wrongly, it became subdued and degraded, like the darkness that would spread when light is hidden,; thala muzhudhum in all of the earth; kali kali yuga; āl̤ginṛa nāl̤ was ruling, during that time,; vandhu (he) came (to this world) as requested (by emperumān); al̤iththavan kāṇmin see the one who redeemed that vĕdha, and protected the world;