RNA 102

இராமானுச! நின்னருள் என்னிடம் எப்படி வளர்ந்தது?

3994 நையும்மனம் உன்குணங்களையுன்னி * என்நாவிருந்துஎம்
ஐயனிராமானுச னென்றழைக்கும் * அருவினையேன்
கையுந்தொழும் கண்கருதிடும் காணக் கடல்புடைசூழ்
வையமிதனில் * உன்வண்மை என்பாலென் வளர்ந்ததுவே?
3994 naiyum maṉam uṉ kuṇaṅkal̤ai uṉṉi * ĕṉ nā iruntu ĕm
aiyaṉ irāmānucaṉ * ĕṉṟu azhaikkum ** aruviṉaiyeṉ
kaiyum tŏzhum kaṇ karutiṭum kāṇa kaṭal puṭai cūzh *
vaiyam itaṉil * uṉ vaṇmai ĕṉpāl ĕṉ val̤arntatuve? (102)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3994. Suffering with the results of my karmā I worshiped you, calling out, “O lord, Rāmānujā!” and you helped me with your compassion in this world surrounded with oceans. My hands worship you and my eyes long to see you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனமும் இராமாநுசரே! என்மனம்; உன் குணங்களை உங்கள் குணங்களை; உன்னி நையும் சிந்தித்து கரைகின்றது; என் நாவிருந்து என் வாக்கும்; எம் ஐயன் இராமாநுசன் எம் ஸ்வாமி இராமாநுசரே; என்று அழைக்கும் என்று அழைக்கின்றது; அருவினையேன் பாபியான என்; கையும் தொழும் கைகளும் அஞ்சலி செய்கின்றன; கண் காண கண்கள் கண்டு வாழ்த்தி வணங்க; கருதிடும் விரும்புகின்றன; கடல் புடை சூழ் கடல் சூழ்ந்த; வையம் இதனில் இந்த பூமியில்; உன் வண்மை உங்களது வள்ளல் தன்மை; என்பால் அடியேன் மீது; வளர்ந்ததுவே என்? வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?
manam mind; unni would contemplate; guṇangal̤ai the qualities; un of your highness; naiyum and become weak within;; en my; tongue; irundhu would be focused / always; em aiyan irāmānusan enṛu and say about our absolute relationship (aiyan – father), and, divine names, {translators note: em aiyan irāmānusan is the divine name of maṇavāl̤a māmunigal̤s divine son of pūrvāṣramam}; azhaikkum and call (you);; aru vinaiyĕn by me who is the at most sinner (that is, ī was not understanding the glory of devotees, but was doing services only to emperumān); kaiyum my hands; thozhum always perform anjali bandham (joining of palms of hands, with reverence);; kaṇ eyes; kāṇa seeing your highness at all times; karudhidum is what it wishes for;; idhu vaiyaththil in this earth; pudai sūzh that is surrounded fully in all sides; kadal by ocean,; en due to what reason; un your; vaṇmai generosity (audhāryam); en pāl towards me; val̤arndhadhu has grown?; azhaikkum will call (the name);; kaṇ karudhidum eyes will contemplate – says due to chĕthana samādhi (it is not the eyes themselves, but the āthmā that directs the eyes);