PT 9.7.6

பிறவித்துயர் நீங்க வல்லவாழ் நினை

1813 உருவினார்பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோற்குரம்பையுள்புக்கு *
அருவிநோய்செய்துநின்று ஐவர்தாம் வாழ்வதற்குஅஞ்சினாயேல் *
திருவினார்வேதநான்கு ஐந்துதீவேள்வியோடுஅங்கமாறும் *
மருவினார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1813 uruviṉ ār piṟavi cer * ūṉ pŏti narampu tol kurampaiyul̤ pukku *
aruvi noy cĕytu niṉṟu * aivar-tām vāzhvataṟku añciṉāyel **
tiruviṉ ār vetam nāṉku aintu * tī vel̤viyoṭu aṅkam āṟum *
maruviṉār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 6

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1813. O heart, are you afraid that the pleasures of the five senses will enter your body made of nerves, skin and flesh and give you terrible diseases? Go to Thiruvallavāzh where Vediyars recite the four Vedās and the six Upanishads and make the five fire sacrifices.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; உருவின் ஆர் ஸூக்ஷ்மசரீரத்தோடு கூடின; பிறவி சேர் பிறவியில்; ஊன் பொதி தசை பொதிந்த; நரம்பு தோல் நரம்பு தோல் ஆகிய; குரம்பையுள் குடிசையுள் புகுந்து; நின்று ஐவர் தாம் புக்கு ஐம்புலன்களால்; வாழ்வதற்கு தாம் வாழ்வதற்கு; அருவி ஆத்மா; நோய் செய்து துன்புறுவதை எண்ணி; அஞ்சினாயேல் நீ அஞ்சுவாயானால்; திருவின் ஆர் பரமப்ரமாணமாக இருக்கும்; நான்கு வேதம் நான்கு வேதங்களும்; அங்கம் ஆறும் ஆறு அங்கங்களும்; ஐந்து தீ ஐந்து தீயோடு; வேள்வியோடு யாகங்களும்; மருவினார் செய்யும் வல்லவர்கள் வாழும்; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்