PT 9.7.2

பெண்ணாசை நீங்கத் திருவல்லவாழ் நினை

1809 மின்னுமாவல்லியும்வஞ்சியும்வென்ற நுண்ணிடைநுடங்கும் *
அன்னமென்னடையினார்கலவியை அருவருத்தஞ்சினாயேல் *
துன்னுமாமணிமுடிப்பஞ்சவர்க்காகி முன்தூதுசென்ற *
மன்னனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1809 miṉṉum ā valliyum vañciyum vĕṉṟa * nuṇ iṭai nuṭaṅkum *
aṉṉa mĕṉ naṭaiyiṉār kalaviyai * aruvaruttu añciṉāyel **
tuṉṉu mā maṇi muṭip pañcavarkku āki * muṉ tūtu cĕṉṟa *
maṉṉaṉār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 2

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1809. O heart, if you are afraid and disgusted with the life you lead loving women whose thin waists are more beautiful than lightning and who walk gently like swans, go to Thiruvallavāzh, the famous place of the god, and embrace him, the messenger for the Pāndavās adorned with crowns studded with precious diamonds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; மின்னும் மின்னலையும்; ஆ வல்லியும் அழகிய கொடியையும்; வஞ்சியும் வஞ்சிக் கொம்பையும்; வென்ற நுண் வென்ற நுண்ணிய; இடை இடையுடையவர்கள்; நுடங்கும் துவளும்படி; அன்ன மென் அன்னம் போல் மென்மையான; நடையினார் நடையுடைய பெண்களின்; கலவியை சேர்க்கையை; அருவருத்து வெறுத்து; அஞ்சினாயேல் அஞ்சுவாயானால்; துன்னு மா சிறப்பான; மணி முடி மணிகளாலான கிரீடமணிந்த; முன் முன்பு; பஞ்சவர்க்கு ஆகி பாண்டவர்களுக்காக; தூது சென்ற தூது சென்ற; மன்னனார் பெருமான் வாழும்; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; பந்தம் ஆர் உள்ளத்தால் அடைய நினை