PT 9.4.3

புல்லாணி சென்ற என் மனம் என்ன செய்கின்றதோ?

1780 வவ்வித்துழாயதன்மேல் சென்றதனிநெஞ்சம் *
செவ்வியறியாது நிற்குங்கொல்? நித்திலங்கள் *
பவ்வத்திரையுலவு புல்லாணிகைதொழுதேன் *
தெய்வச்சிலையாற்கு என்சிந்தைநோய்செப்புமினே.
1780 vavvit tuzhāy-ataṉmel * cĕṉṟa taṉi nĕñcam *
cĕvvi aṟiyātu * niṟkumkŏl? nittilaṅkal̤ **
pavvat tirai ulavu * pullāṇi kaitŏzhuteṉ *
tĕyvac cilaiyāṟku * ĕṉ cintai-noy cĕppumiṉe-3

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1780. She says, “My lonely heart went everywhere searching for him who is adorned with a thulasi garland. Has it lost its way? I fold my hands and worship him in Thiruppullāni where the waves of the sea crash on the shore. Go and tell him how I suffer with my love for him. Why does he stand silently like a divine statue. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துழாய் அதன் மேல் திருத்துழாய் மாலையை; வவ்வி பற்றிக்கொண்டு; சென்ற தனி நெஞ்சம் சென்ற என் மனமானது; செவ்வி என் அழகு அழியும் என்று; அறியாது அறியாமல்; நிற்கும்கொல்? அங்கேயே தாமதித்திருக்குமோ?; நித்திலங்கள் முத்துக்களையுடைய; பவ்வத் திரை உலவு கடல் அலைகள் உலவும்; புல்லாணி திருப்புல்லாணியை; கைதொழுதேன் வணங்கின; என் சிந்தை நோய் என் சிந்தை நோயை; தெய்வச் சிலையாற்கு வில்லேந்திய ராமனிடம்; செப்புமினே அறிவியுங்கள்