PT 9.4.10

மண்ணுலகை ஆண்டு தேவருலகு சேர்வர்

1787 பொன்னலரும்புன்னைசூழ் புல்லாணியம்மானை *
மின்னிடையார்வேட்கைநோய்கூர இருந்ததனை *
கன்னவிலும்திண்தோள் கலியனொலிவல்லார் *
மன்னவராய்மண்ணாண்டு வானாடுமுன்னுவரே. (2)
1787 ## pŏṉ alarum puṉṉai cūzh * pullāṇi ammāṉai *
miṉ iṭaiyār veṭkai noy kūra * iruntataṉai **
kal navilum tiṇ tol̤ * kaliyaṉ ŏlivallār *
maṉṉavar āy maṇ āṇṭu * vāṉ nāṭum muṉṉuvare-10

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1787. Kaliyan, the poet with strong mountain-like arms, composed pāsurams describing how a girl with a waist like lightning loves our father, the lord of Thiruppullāni surrounded with punnai trees blooming with golden flowers. If devotees learn and recite these pāsurams well they will rule this earth as kings and also rule the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் அலரும் பொன் போன்ற பூக்கள் மலர்ந்த; புன்னை சூழ் புன்னை மரங்கள் சூழ்ந்த; புல்லாணி திருபுல்லாணி; அம்மானை பெருமானைக் குறித்து; மின் மின்னல்போல்; இடையார் இடையுடைய பெண்களுக்கு; வேட்கை காதல்; நோய் கூர நோயானது மிகுதியாக; இருந்ததனை இருக்கும் நிலைமையைப் பற்றி; கல் நவிலும் மலை போன்ற; திண் தோள் திடமான தோள்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலி அருளிச்செய்த பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்; மன்னவராய் அரசர்களாகி; மண் ஆண்டு பூமியை ஆட்சிபுரிந்து பிறகு; வான் நாடும் முன்னுவரே பரமபதமும் ஆள்வார்கள்