PT 9.4.1

பிரிவு வாட்டுகிறது: புல்லாணி தொழுதேன்

1778 காவார்மடல்பெண்ணை அன்றிலரிகுரலும் *
ஏவாயினூடியங்கும் எஃகில்கொடிதாலோ! *
பூவார்மணம்கமழும் புல்லாணிகைதொழுதேன் *
பாவாய்! இதுநமக்கு ஓர்பான்மையேயாகாதே. (2)
1778 ## kā ār maṭal pĕṇṇai * aṉṟil arikuralum *
e vāyiṉūṭu iyaṅkum * ĕḵkiṉ kŏṭitālo **
pū ār maṇam kamazhum * pullāṇi kaitŏzhuteṉ *
pāvāy itu namakku or * pāṉmaiye ākāte?-1

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1778. She says, “ The sorrowful calling of the andril bird that stays on the long branch of the palm tree in the grove is more cruel than the pain of a spear making a wound. I fold my hands and worship the lord of Thiruppullāni where the fragrance of the flowers spreads everywhere. O my friend beautiful as a statue! Do you think this worship will become a habit for us?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடல் மடல்களையுடைய; பெண்ணை பனைமரங்களிலிருக்கும்; அன்றில் அன்றில் பறவைகளின்; கா ஆர் சோலையெங்கும் நிறைந்த; அரிகுரலும் தழுதழுத்த குரலும் துன்புறுத்துகிறது; ஏ வாயினூடு அம்புபட்ட புண்வாயில்; இயங்கும் எஃகின் வேல் நுழைந்தது போன்ற; கொடிதாலோ! கொடுமையைக் காட்டிலும் கொடியது; பூ ஆர் மணம் கமழும் பூக்களின் மணம் கமழும்; புல்லாணி திருப்புல்லாணியை; கை தொழுதேன் விரும்பி வணங்கினேன்; பாவாய்! தோழியே! பதுமை போன்ற; இது நமக்கு இப்படி நோவு படுவதே நமக்கு; ஓர் பான்மையே ஆகாதே ஸ்வபாவமாகி விட்டதே