PT 9.3.6

மனமே! இங்கிருந்து என்ன பயன்? கிளம்பு

1773 எள்கிநெஞ்சே! நினைந்திங்கிருந்தென்? தொழுதும்எழு *
வள்ளல்மாயன்மணிவண்ணன்எம்மான் மருவுமிடம் *
கள்ளவிழும்மலர்க்காவியும் தூமடற்கைதையும் *
புள்ளும்அள்ளல்பழனங்களும்சூழ்ந்த புல்லாணியே.
1773 ĕl̤ki nĕñce niṉaintu iṅku iruntu ĕṉ? * tŏzhutum ĕzhu- *
val̤l̤al māyaṉ * maṇivaṇṇaṉ ĕmmāṉ maruvum iṭam **
kal̤ avizhum malark kāviyum * tū maṭal kaitaiyum *
pul̤l̤um al̤l̤al pazhaṉaṅkal̤um cūzhnta * pullāṇiye-6

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1773. She says, “O heart, what is the use of worrying and staying here thinking of Māyan, our generous, sapphire-colored lord and his love? He is the god of Thiruppullāni surrounded with birds and fields with wet sand where kāvi flowers drip honey and thāzhai flowers with beautiful leaves bloom, opening their lovely petals. Come, let us go there and worship him. . ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எள்கி நெஞ்சே! அவனிடம் ஈடுபட்ட மனமே!; நினைந்து இங்கு அவனை சிந்தித்து உருகி இங்கு; இருந்து என் இருந்து என்ன பயன்; வள்ளல் மாயன் வள்ளலானவன் அவன் மாயன்; மணிவண்ணன் மணிவண்ணன்; எம்மான் எம்பெருமான்; மருவும் இடம் விரும்பியிருக்குமிடம்; கள் அவிழும் மது பெருகும்; மலர்க் காவியும் செங்கழுநீர் மலர்களும்; தூ மடல் வெளுத்தமடல் களையுடைய; கைதையும் தாழைகளும்; புள்ளும் அள்ளல் பலவகையான பறவைகளும்; பழனங்களும் சேறுமிக்க வயல்களும்; சூழ்ந்த சூழ்ந்த; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு