PT 9.2.7

இவரைக் கண்டு என் மனம் பணிகின்றதே!

1764 பிணியவிழ்தாமரைமொட்டலர்த்தும்
பேரருளாளர்கொல்? யான்அறியேன் *
பணியும்என்நெஞ்சமிதென்கொல்? தோழீ!
பண்டுஇவர்தம்மையும்கண்டறியோம் *
அணிகெழுதாமரையன்னகண்ணும் *
அங்கையும்பங்கயம், மேனிவானத்து *
அணிகெழுமாமுகிலேயும்ஒப்பர்
அச்சோஒருவரழகியவா!
1764 piṇi avizh tāmarai mŏṭṭu alarttum *
per arul̤āl̤arkŏl? yāṉ aṟiyeṉ *
paṇiyum ĕṉ nĕñcam itu ĕṉkŏl? tozhī *
paṇṭu ivar-tammaiyum kaṇṭaṟiyom **
aṇi kĕzhu tāmarai aṉṉa kaṇṇum *
am kaiyum paṅkayam meṉi vāṉattu *
aṇi kĕzhu mā mukileyum ŏppar- *
acco ŏruvar azhakiyavā-7

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1764. She says about the lord of Thirunāgai, “O friend, with eyes and hands as beautiful as lotuses and a dark cloud like body, he is generous and gives his grace to his devotees making their lotus hearts bloom. My heart worships him. I don’t understand what is happening. I have never seen him before. Acho, how can I describe his beauty!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிணி குவிந்திருக்கும் கமலத்தை; அவிழ் மலரச்செய்யும் இவர்; தாமரை மொட்டு தாமரை மொட்டை; அலர்த்தும் மலரச்செய்யும் சூரியனை போன்ற; பேர் அருளாளர் கொல்? பேர் அருளாளரோ இவர்?; யான் அறியேன் நான் அறியேன்; என் நெஞ்சம் என் நெஞ்சம் இவரை; பணியும் வணங்குகிறது; இது என் கொல்? தோழி! இது என்னவோ? தோழி!; பண்டு இவர் தம்மையும் முன்பு ஒரு போதும்; கண்டு அறியோம் இப்படி பார்த்தில்லை; அன்ன கண்ணும் இவருடைய கண்களும்; அணி கெழு அழகிய; தாமரை தாமரை போன்றது; அம் கையும் அழகிய கைகளும்; பங்கயம் தாமரை போன்றது; மேனி வானத்து சரீரம் ஆகாசத்திலிருக்கும்; அணி கெழு மா அழகிய பெரிய; முகில் ஏயும் ஒப்பர் நீல மேகத்தை ஒத்திருக்கிறது; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ ஆவர் என்னவென்று கூறுவேன்!